பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் சோதனை ஓட்டம் தொடங்கியது!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கோவாக்சின் எனும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட சோதனை ஓட்டம் தொடங்கியது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரியவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு தற்போது போடப்படுகின்றன. இந்த இந்த நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வருவதால் அவர்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டது.

Covid Vacine: Trials on Children begins at Patna

இதற்காக 2 வயது முதல் 18 வயதுக்குள்பட்டோருக்கு தடுப்பூசி போடும் சோதனை ஓட்டத்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பாரத்பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி சோதனை ஓட்டத்தை நடத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்தது.

இவர்கள் குழந்தைகளிடம் 2, 3 கட்ட சோதனைகளை நடத்துவர். இதற்காக பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சோதனை ஓட்டம் தொடங்கியது. பல்வேறு இடங்களில் 525 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை சோதனை முறையில் போட திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஒரு மாதத்திற்கு 10 கோடி டோஸ்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

English summary
Covid Vaccine: Clinical trials begin at AIIMS at Patna, says Bharat Biotech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X