பீகார் சட்டமன்ற தேர்தல்.. திடீரென ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒருமித்த கருத்து!
பாட்னா: இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தேர்தலை ஒன்று அல்லது இரண்டு கட்டங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் வலியுறுத்தியுள்ளன.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரே கட்டத் தேர்தலை வலியுறுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் இரண்டு கட்டத் தேர்தலைக் கோரியுள்ளன. இரு தரப்பினரும் அக்டோபர் 25 அன்று தொடங்கும் சத் பண்டிகைக்குப் பிறகு தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல்கள் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. தேர்தல் ஆணையத்தின் தற்போது பீகாரில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 12 கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருக்கின்றனர். முழு தேர்தல் ஆணையக் குழுவும் இன்று பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பு நடத்திய பிறகு டெல்லி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வார தொடக்கத்தில் பீகார் தேர்தல் தேதிகளை அவர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது. சனிக்கிழமை அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க, சத் பண்டிகைக்குப் பிறகு பீகாரில் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்று கட்சிகள் கோரின. மேலும், குறைந்த எண்ணிக்கையிலான கட்டங்களில் தேர்தல்களை நடத்தவும் பரிந்துரைத்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் அதிகபட்சம் 1,200 வாக்காளர்களை நிர்ணயித்ததற்காக தேர்தல் ஆணையத்திற்கு கட்சிகள் நன்றி தெரிவித்தன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கட்சிகளில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை ஆகியவை இரண்டு கட்டத் தேர்தலைக் கோரின. இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் மக்களின் பெயர்கள் மற்றும் அதற்கான காரணங்களுடன் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
தேர்தல் ஆணையம் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்ற ராஷ்ட்ரிய ஜனதா தளம் செய்தித் தொடர்பாளர் சித்ரஞ்சன் ககன், "நாங்கள் இரண்டு கட்டத் தேர்தலைக் கோரியுள்ளோம். சிறப்பு தீவிர மறுபரிசீலனையின் போது செய்யப்பட்ட உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து தேர்தல் ஆணையம் வெளிப்படையாக இல்லாதது குறித்து எங்கள் கவலைகளை எழுப்பியுள்ளோம். நிராகரிப்புகளுக்கான காரணங்களை அது அளிக்கவில்லை.
புதிய வாக்காளர்களுக்கு உடனடியாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினோம். நிதிஷ் குமார் தலைமையிலான அரசு தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு சலுகைகளை அறிவிப்பது குறித்தும் கவலை தெரிவித்துள்ளோம். சில அதிகாரிகளின் இடமாற்றங்கள் சரியான காரணம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன" என்று கூறியிருந்தார்.
அதேபோல தேர்தல் ஆணையக் குழுவை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை அலுவலகச் செயலாளர் குமார் பர்வேஸ் கூறுகையில், "SIR வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் அளித்ததைப் போலவே, இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களின் விவரங்களையும் நாங்கள் கோரினோம். புதிய வாக்காளர்கள் மற்றும் SIR-ன் வரைவு கட்டத்தில் பெயர்கள் நீக்கப்பட்ட பிறகு புதிய வாக்காளர்களாக விண்ணப்பித்தவர்களின் விவரங்களையும் கோரினோம்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications