அரசு வேலை மாப்பிள்ளைக்கு பீகாரில் நேர்ந்த கொடுமை! "என்னை விட்ருங்க" தாலி கட்டும்போது கெஞ்சிய இளைஞர்
பாட்னா: பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக கடினமாக உழைத்துக் கொண்டிருந்த ஒரு இளைஞரை, மர்ம நபர்களால் கடத்தி விட்டார்கள்.. அவருக்கு வலுக்கட்டாயமாக திருமணமும் செய்து வைத்துள்ளனர்.. ஏன் தெரியுமா??
பீகாரின் சில பகுதிகளில் நீண்ட காலமாகவே முக்கிய பிரச்சனை ஒன்று நிலவி கொண்டிருக்கிறது... மாப்பிள்ளைகளை அங்கு கடத்தி விடுவதுதான் அந்த பயங்கரம்... இதற்கு பகடுவா ஷாதி என்கிறார்கள்...

பகடுவா ஷாதி
அதாவது அரசு வேலையில் இருப்பவர்கள் அல்லது அரசு வேலைக்கு தயாராகும் இளைஞர்களை கடத்திச் சென்று வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.. இப்படியொரு ஒரு மோசமான வழக்கம் பீகாரில் உள்ளது.. அப்படிதான் பகடுவா ஷாதி-க்கு இளைஞர் ஒருவர் பலிகடா ஆகி உள்ளார்.. அவருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ள்ளனர்..
இந்த கல்யாணம் வீடியோவாக வெளிவந்து சோஷியல் மீடியாவில் பரவி கொண்டிருக்கிறது... அந்த வீடியோவில் திருமண மேடையில், அந்த இளைஞர் மாப்பிள்ளை கோலத்தில் பரிதாபமான நிலையில் உட்கார்ந்திருக்கிறார்.. அவர் ஒருவித மயக்க நிலையில் இருப்பது போல உள்ளது.. அவரால் நேராக நிமிர்ந்து கூட உட்கார முடியவில்லை... ஒருவித மதயக்கத்தில் தள்ளாடி கொண்டே உட்கார்ந்திருப்பது வீடியோவில் அப்பட்டமாகத் தெரிகிறது.
மணமேடையில் சுயநினைவின்றி
அப்படியானால் அவருக்கு ஏதோ ஒரு வகையான போதை மருந்து அல்லது மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர்.
திருமண சடங்குகள் நடைபெறும் போது அந்த இளைஞர் தனது சுயநினைவை இழந்த நிலையில் காணப்படுகிறார். மணமேடையில் மணமகள் அருகில் அமர்ந்திருக்கும் போது அவரது தலை ஒரு பக்கமாக சரிந்து விழுகிறது. ஆனால் அங்கிருக்கும் சிலர் எவ்வித இரக்கமுமின்றி அவரது தலையைத் தாங்கி பிடித்து கொள்கிறார்கள். திருமண சடங்குகளும் தொடர்ந்து நடக்கிறஐ...
அதாவது மணமகன் தனது கைகளை உயர்த்தி மாலை மாற்ற வேண்டிய சடங்கின்போது அவரால் கையைக்கூட அசைக்க முடியவில்லை... அந்த அளவுக்கு போதைக்கு ஆட்படுத்தியிருக்கிறார்கள்...
முணுமுணுத்த மாப்பிள்ளை
உடனே அங்குள்ள ஒரு நபர் அந்த இளைஞரின் கைகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து உயர்த்தி மணமகளின் கழுத்தில் மாலையை போட வைக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது இது ஒரு திருமணம் போலவே தெரியவில்லை.. மாறாக ஒரு மனிதனைச் சித்திரவதை செய்யும் செயலாகவே தெரிகிறது..
அந்த இளைஞர் அடிக்கடி ஏதோ முணுமுணுத்து தனது எதிர்ப்பை தெரிவிக்க முயல்கிறார் ஆனால் உடல் ரீதியாக அவர் மிகவும் பலவீனமாக இருப்பதால் அவரால் அந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்கவும் முடியவில்லை. இந்த வீடியோவில் மணமகளும் சடங்குகளில் பங்கேற்கிறார்.. ஆனால் மணமகனின் நிலை குறித்து அங்குள்ள யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
போலீஸ் தேர்வு - அரசாங்க வேலை
இந்த வீடியோவை பார்த்து ஒட்டுமொத்த நெட்டிசன்களும் ஆடிப்போய்விட்டார்கள்.. மக்கள் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இது போன்ற சட்டவிரோதச் செயல்கள் 21ம் நூற்றாண்டிலும் நடப்பது வெட்கக்கேடானது என்று பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஒருவரது சம்மதம் இல்லாமல் அவரை துப்பாக்கி முனையிலோ அல்லது போதை மருந்து கொடுத்தோ திருமணம் செய்வது சட்டப்படி மிகப்பெரிய குற்றமாகும். பாதிக்கப்பட்ட இளைஞர் போலீஸ் வேலைக்காகத் தயாராகி வந்தவர் என்பதால் அவர் மீதான இந்த தாக்குதல், அதே போலீஸ் தேர்வுக்காக உழைக்கும் மற்ற இளைஞர்களிடையேயும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
பகடுவா ஷாதி முறையை ஒழிக்க அரசு கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தாலும் கிராமப்புறங்களில் இன்றும் இத்தகைய அநீதிகள் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாகும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
போதை மருந்தை இளைஞருக்கு தந்துள்ளதால், காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த இளைஞரை மீட்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள நிலையில், பீகார் மாநிலக் போலீசார் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்..
கைது - நடவடிக்கை
அப்போதுதான், இளைஞருக்கு நிஜமாகவே வாயில் போதையை கலந்து ஊற்றி, கடத்தி சென்றது உறுதியானது.. பிறகு கடத்தப்பட்ட நபர்களை பிடித்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..
பீகாரில் அரசு வேலை மற்றும் உயர் கல்வி முடித்த இளைஞர்களை குறி வைத்து கட்டாய திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 2009-ம் ஆண்டு முதல் இதுவரை 1224 ஆண்களை கட்டாய திருமணம் செய்யப்பட்டுள்ளதாம்....!!












Click it and Unblock the Notifications