பீகார்: கொரோனாவுக்கு இடையே நடக்கும் முதல் சட்டசபை தேர்தல்.. அருமையான ஏற்பாடு.. அச்சம் தேவையில்லை
Subscribe to Oneindia Tamil
பாட்னா: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு நடைபெறக்கூடிய முதல் சட்டசபை தேர்தல் என்ற பெருமையை பீகார் மாநில சட்டசபை தேர்தல் பெற்றுள்ளது.
ஆம்.. பெருமை என்று, நாம், குறிப்பிடுவதற்கு காரணம், அந்த அளவுக்கு வாக்குச்சாவடி மையங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அசத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பது, அல்லது கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முன்பாக, இனி ஏதாவது சட்டசபை தேர்தல்கள் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், பீகார் மாநிலத்தில் தேர்தல் நடத்தியுள்ள விதம் ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படும் என்பது மட்டும் நிச்சயம்.
அப்படி என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள் என்று கேட்கிறீர்களா?
- தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளும் முககவசம் மட்டும் இல்லாமல் கையில் கிளவுஸ் அணிந்துள்ளனர்.
- ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும், சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் உள்ளே செல்லும் போது அதில் தங்கள் கையை கழுவ வேண்டும்.
- வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பாகவே வாக்குச்சாவடிகள் அனைத்திலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது
- வாக்களிக்க வரும் ஒவ்வொரு வாக்காளருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது, இதற்கு வெப்பமானிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
- காத்திருக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கு இடையேயும் ஆறு அடிக்கு குறையாமல் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டு அதை குறிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு உள்ளே மட்டும்தான் வாக்காளர்கள் நிற்க வேண்டும்.
- இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி கொரோனா பரவி விட முடியாது, இந்த விதிமுறைகளை மக்கள் ஒழுங்காக மதித்து நடந்தாலே போதும், எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு தேர்தலிலும் எளிதாக நடத்தி விடலாம் என்ற நம்பிக்கையை பீகார் மாநில தேர்தல் அளித்துள்ளது.
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications