பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேற்று நடந்த கொலை.. நேபாள எல்லையில் வாழும் மக்களுக்கு சாட்டிலைட் போன்களை தந்த மத்திய அரசு.. பிளான்?

Google Oneindia Tamil News

பாட்னா: நேபாளம் எல்லையில் வசிக்கும் இந்திய மக்களுக்கு மத்திய அரசு சார்பாக சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா எல்லையில் பீகார் அருகே இந்தியர் ஒருவர் நேற்று நேபாளம் போலீஸ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் அருகே சீதமார்கி பகுதியில் இந்த துப்பாக்கி சூடு நடந்து இருக்கிறது.

இதில் இந்தியர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். அங்கிருக்கும் இந்தியர்கள் மற்றும் நேபாளம் போலீசாருக்கு இடையே சண்டை வந்ததுதான் இதற்கு காரணம் என்கிறார்கள். தங்கள் வயலுக்கு இந்தியர்கள் செல்லும் போது போலீசார் அவர்களை சுட்டு தள்ளி இருக்கிறார்கள்.

கொரோனா: 18 நாட்கள் வென்டிலேட்டர்.. மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு வந்த 4 மாதக் குழந்தை டிஸ்சார்ஜ் கொரோனா: 18 நாட்கள் வென்டிலேட்டர்.. மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு வந்த 4 மாதக் குழந்தை டிஸ்சார்ஜ்

உதவி

உதவி

இந்த நிலையில் நேபாளம் எல்லையில் வசிக்கும் இந்திய மக்களுக்கு மத்திய அரசு சார்பாக சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக பீகார் மற்றும் உத்தரகாண்ட் எல்லையில் இருக்கும் மக்களுக்கு இந்த போன்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய பேரிடர் மீட்பு படை மூலம் போன்கள் வழங்கப்பட்டு உள்ளது. அங்கு தொலைபேசி இணைப்புகள் எதுவும் இல்லை. பெரிய அளவில் நெட்வொர்க் இல்லை.

நெட்வொர்க் இல்லை

நெட்வொர்க் இல்லை

அங்கு போன் வைத்திருக்கும் மக்கள் கூட நேபாளத்தை சேர்ந்த செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களின், சிம்களைதான் பயன்படுத்துகிறார்கள். இது எல்லை பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும். அங்கு பிஎஸ்என்எல் கூட சிக்னல் எடுப்பது இல்லை. இதனால் அங்கிருக்கும் 49 கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு சாட்டிலைட் போன் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 34 தாசில்தார்களுக்கு அங்கு போன்கள் வழங்கப்பட்டு உள்ளது .

விரைவில் மற்றவர்கள்

விரைவில் மற்றவர்கள்

விரைவில் அங்கு மக்களுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் போன்கள் வழங்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் இதன் மூலம் செய்யப்படும் போன் கால் கட்டணம் மிக அதிகம் ஆகும் . ஒரு லோக்கல் மற்றும் தேசிய காலுக்கு நிமிடத்திற்கு 12 ரூபாய் இதில் செலவாகும். மெசேஜ் செய்யவும் 12 ரூபாய் செலவாகும். சர்வதேச காலுக்கு 260 ரூபாய் நிமிடத்திற்கு செலவாகும்.

Recommended Video

    எல்லையில் 2.5 கி.மீ பின்வாங்கியது சீன ராணுவம்
    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    எல்லையில் இருக்கும் மக்கள் அவசரத்திற்கு போலீஸ் உதவி அல்லது பாதுகாப்பு உதவியை கேட்க முடிவதில்லை. எல்லையில் நேபாளம் அத்துமீறினால் அதை பற்றி மக்கள் தகவல் கொடுக்க முடிவதில்லை. சீனாவின் வீரர்களை ரோந்து பணிகளை செய்தால் கூட அதை பற்றி அங்கிருக்கும் மக்கள் தகவல் கொடுக்க முடியவில்லை. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் சிக்கல்கள், குறைப்பாடுகள் ஏற்படுகிறது. நேபாளம் சிம்மை பயன்படுத்துவதும் பாதுகாப்பு இல்லை.

    நேற்று மரணம்

    நேற்று மரணம்

    இந்த நிலையில்தான் நேற்று இந்தியர் ஒருவர் எல்லையில் நேபாளம் போலீஸ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டார். இது போன்ற அசம்பாவிதங்கள் போன்கள் இருந்தால் தவிர்க்கப்பட்டு இருக்கும். இந்த நிலையில் இதை தடுக்கும் வகையில் தற்போது நேபாளம் எல்லையில் வசிக்கும் இந்திய மக்களுக்கு மத்திய அரசு சார்பாக சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பின் பாதுகாப்பு காரணங்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Indian government gives Satelite phones to its citizens those who live in Nepal border.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X