வியூகத்தால் பீகாரை வென்ற பாஜக! காங்., வீழ்ச்சியடைந்தது இப்படித்தான்! தேஜஸ்வி சுதாரித்து இருக்கனும்
பாட்னா: பீகாரில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது. இத்தனைக்கும் பீகாரில் அதிக வாக்குளை வென்றது என்னவோ ஆர்ஜேடிதான். இருப்பினும் அக்கட்சியால் 25 தொகுதிகளை தாண்ட முடியவில்லை. இப்படி இருக்கையில் இந்த வெற்றிகான காரணம் என்ன என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி ஆகியவற்றை தொடர்ந்து பீகாரிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை பார்க்கும்போது பாஜக வெற்றி பெறுவதற்கு வெறுமென எந்திரத்தனமாக செயல்படவில்லை. மாறாக அது வியூகத்தின் அடிப்படையில் செயல்படுகிறது என்று தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த வெற்றியை தடுக்க வேண்டிய எதிர்க்கட்சிகளோ, இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் போதுமான அளவுக்கு இறங்கி கிரவுண்ட் ஒர்க் செய்யவில்லை. இதன் காரணமாக பல்வேறு தரப்பினரும் எதிர்க்கட்சியை நோக்கி கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர். பாஜக எப்படி தொடர்ந்து வெற்றிப்பெறுகிறது? என்கிற கேள்வி, எதிர்க்கட்சிகள் ஏன் வீரியமாக செயல்படவில்லை என்கிற கேள்வியாக மாறியிருக்கிறது. பாஜக வெற்றிக்கு காரணம், அதன் தலைவர்கள் தேர்தலை எதிர்கொள்வதற்கு பதில் பொறியியல் ரீதியாக தேர்தலை வடிவமைக்கிறார்கள்.
அதன் தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு தயாராகாமல், ஒரு சகாப்தத்தை வடிவமைக்க முயற்சிக்கிறார்கள். பிரதமர் மோடி தேர்தல்களை விரும்புகிறார். அமித்ஷா, அறுவகை சிகிச்சை நிபுணரை போல தேர்தல்களை அணுகுகிறார். மோடி புராணம் எனில், அமித்ஷா கணிதமாக இருக்கிறார் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இவர்களின் தலைமையில் கட்சியின் தொடர் செயல்பாடு, வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
இதை அப்படியே பீகார் தேர்தலுக்கு பொறுத்தி பார்ப்போம். பீகாரில் கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போது தேஜஸ்வி யாதவ் தீவிரமாக பணியாற்றியிருந்தார். அவரது முகத்தை பீகார் முழுவதும் கொண்டுபோய் சேர்த்தார். இது நல்ல முயற்சிதான். ஆனால், வெற்றிக்கு தொடர் முயற்சி தேவை. மக்களவை தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் இந்த ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிடுவதில் பயங்கரமாக சொதப்பினார்.
குடும்ப பஞ்சாயத்துகளில் சிக்கிய தேஜஸ்வி சில மாதங்கள் வரை பொதுமக்கள் கண்ணில் படாமலேயே இருந்துவிட்டார். பின்னர் மிகவும் தாமதமாகவே பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த பிரச்சாரங்களும் அவரை எமோஷனலாக மக்களிடத்தில் கனெக்ட் செய்யவில்லை. ஒரு பக்கம் அவரது அண்ணன் தனித்து போட்டியிட, மறுபுறம் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக சில தொகுதிகளில் ஆர்ஜேடி களமிறங்க, இதெல்லாம் வாக்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த தவறிவிட்டது.
இந்த சொதப்பல் போதாது என, காங்கிரஸும் தன் பங்குக்கு சேர்ந்துக்கொண்டு, வெற்றியை பின்னோக்கி இழுத்தது. தேர்தல் தொடக்கத்திலேயே தேஜஸ்வியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்திருக்கலாம். ஆனால் ஈகோ காரணமாக இதை அறிவிக்க காங்கிரஸ் தயாராக இல்லை. எனவே விஷயம் மேலும் சிக்கலானது. கடைசியில் வேறு வழியின்றி தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டது.
காங்கிரஸ், ஆர்ஜேடி போன்ற கட்சிகள் வெற்றியை ருசிக்க ரெடியாக இருக்கின்றன. ஆனால் அந்த வெற்றியை எப்படி எட்டுவது என்பதுதான் அவர்களுக்கு தெரியவில்லை. எதிர்க்கட்சி கூட்டணியில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை. தலைமைக்குதான் பஞ்சம் இருக்கிறது. இது பீகார் தேர்தலில் தோல்வியாக எதிரொலித்திருக்கிறது. இனியாவது யதார்த்தத்தை புரிந்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications