பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

40 ஆண்டுகால பீகார் தேர்தல் களத்தில் முதல் முறையாக... லாலு பிரசாத் பிரசாரம் இல்லை!

Google Oneindia Tamil News

பாட்னா: 40 ஆண்டுகால பீகார் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக தற்போதுதான் லாலு பிரசாத் பிரசாரம் இடம்பெறவில்லை.

பீகார் முன்னாள் முதல்வரான லாலுபிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இன்று கூட ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்த போதும் மற்ற வழக்குகளால் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது.

பீகார் தேர்தல்.. கோதாவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா.. வெளியானது 'பிரச்சார பீரங்கிகளின்' லிஸ்ட் பீகார் தேர்தல்.. கோதாவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா.. வெளியானது 'பிரச்சார பீரங்கிகளின்' லிஸ்ட்

லாலு பிரசாரம் இல்லை

லாலு பிரசாரம் இல்லை

தற்போது லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்விதான் ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் பிரசாரம் செய்யவில்லை.

லாலு முதல் முறையாக களத்தில் இல்லை

லாலு முதல் முறையாக களத்தில் இல்லை

கடந்த 40 ஆண்டுகால பீகார் வரலாற்றில் லாலுவின் பிரசாரம் இல்லாத தேர்தல் இது. 1977-ம் ஆண்டு லாலு பிரசாத் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பியானார். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது லாலு சிறையில் இருந்ததால் பிரசாரம் செய்யவில்லை.

பீகாரில் லாலு முகமே இல்லை

பீகாரில் லாலு முகமே இல்லை

தற்போது பீகார் சட்டசபை தேர்தலிலும் லாலுவின் பிரசாரம் இல்லை. 1997-ம் ஆண்டு ஆர்ஜேடி தொடங்கப்பட்ட பின்னர் லாலு முகம் இல்லாமல் அந்த கட்சி இப்போது தேர்தலை எதிர்கொள்கிறது.

சாதனை படைக்குமா ஆர்ஜேடி?

சாதனை படைக்குமா ஆர்ஜேடி?

லாலு இல்லாத சூழ்நிலையில் ஆர்ஜேடி தலைமையில் மெகா கூட்டணியும் உதயமாகி உள்ளது. இந்த மெகா கூட்டணி ஜேடியூ-பாஜக அணிக்கு கடும் நெருக்கடியை தருமா? தராதா? என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவித்து விடும்.

English summary
In last 40 years, RJD Chief Lalu Prasad Yadav will not Campaign for the Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X