பீகாரில் கொரோனா பரவல் அதிகரிப்பு - மே 15 வரை முழு லாக் டவுன் நீட்டிப்பு
பீகாரில் ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நெருக்கடி மேலாண்மை குழு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னா: பீகாரில் வரும் மே 15 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 11,407 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று 82 பேர் உயிரிழந்தனர். பீகாரில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.09 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பீகாரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.09 லட்சமாக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் லாக்டவுன் அறிவித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர்நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க நேரும் என்று கூறப்பட்ட நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சக அமைச்சர்கள், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நெருக்கடி மேலாண்மை குழு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications