இந்தியாவின் இளம் எம்.பி. இவர்தான்.. யார் இந்த சாம்பவி சவுத்ரி? 25 வயதில் நாடாளுமன்ற என்ட்ரி!
பாட்னா : இந்தியாவின் இளம் எம்.பி. என்ற பெயரை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் சாம்பவி சவுத்ரி பெற்றுள்ளார்.
நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருந்த நிலையில், இம்முறை காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் எழுச்சி பெற்றுள்ளன. இதனால் பாஜக தரப்பில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படவுள்ளது. இதற்காக பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பீகாரை சேர்ந்த 25 வயதேயான பெண் சாம்பவி சவுத்ரி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். பீகார் லோக்சபா தேர்தலில் சமஸ்திபூர் தொகுதியில் போட்டியிட்ட சாம்பவி சவுத்ரி, 1,87,251 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் இளம் எம்.பி. என்ற அந்தஸ்தை சாம்பவி சவுத்ரி பெற்றுள்ளார்.
3வது தலைமுறை அரசியல்வாதியான சாம்பவி சவுத்ரியின் தாத்தா மஹாவீர் சவுத்ரி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அமைச்சராக இருந்தனர். அதன்பின் அவரின் தந்தை அசோக் சவுத்ரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தவர். தற்போதைய நிதிஷ் குமார் ஆட்சியின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார்.
டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் சோசியாலஜி துறையில் பட்டம் பெற்றவர் சாம்பவி சவுத்ரி. இந்த வெற்றிக்கு பின் சாம்பவி சவுத்ரி பேசுகையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வேன். மிகப்பெரிய வெற்றியை சமஸ்திபூர் மக்கள் எனக்கு கொடுத்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் மனதிலும் இடம் கிடைத்துள்ளதாகவே கருதுகிறேன்.
அவர்களின் மகளாக ஆசீர்வாதம் பெற என்னை, இப்போது மக்கள் என்னை தங்களின் மகளாக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இவருக்கு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆச்சரியா கிஷோர் குணாலின் மகன் சயன் குணாலுடன் திருமணம் முடிந்துள்ளது. இந்தியாவின் இளம் எம்பி-யாக தேர்வாகியுள்ள சாம்பவி சவுத்ரிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications