3 மாநில மக்கள் ஆதரவாம்.. "நேரு"வை பிரதமராக்கிய பூல்பூர் லோக்சபா தொகுதியில் நிதிஷ்குமார் போட்டியா?
பாட்னா: பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) மூத்த தலைவருமான நிதிஷ்குமார் லோக்சபா தேர்தலில் பூல்பூர் தொகுதியில் இருந்து போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பூல்பூர் தொகுதியில் நிதிஷ்குமார் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை மட்டும் அக்கட்சியின் மூத்த தலைவரும் பீகார் அமைச்சருமான ஸரவண் குமார் தொடர்ந்து கூறி வருகிறார்.
லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியின் 3-வது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா செய்து வருகிறது.

மும்பை கூட்டம்: "இந்தியா" கூட்டணியின் மும்பை கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸை பங்கேற்கவிடாமல் தடுப்பதற்கான அனைத்து பகீரத முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், தொடர்ந்து சரத்பவாரை சந்தித்து பேசி வருகிறார். சரத்பவார் தரப்பும், பாஜகவுடனான உறவு தொடர்பாக முரண்பட்ட கருத்துகளை பேசி வருகிறது.
பிரதமர் வேட்பாளர் யார்?: "இந்தியா" கூட்டணியின் மும்பை கூட்டத்தில் தொகுதி பங்கீடு மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த பேச்சுகளும் பலமாக அடிபடத் தொடங்கிவிட்டன. ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்கிறார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக்க திமுக நிச்சயம் ஆதரவு அளிக்கும். ஆனால் மமதா பானர்ஜி, சரத்பவார், நிதிஷ்குமார் கட்சிகள் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது குழப்பம்தான்.
ரேஸில் நிதிஷ்குமார்: இன்னொரு பக்கம், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளர் கனவில் "இந்தியா" கூட்டணியையே உருவாக்கினார் என்பது பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நீண்டகால விமர்சனம். தாம் ஒருபோதும் "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளரே இல்லை என்பது நிதிஷ்குமார் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்து.
பூல்பூர் தொகுதியில் போட்டி?: ஆனால் நிதிஷ்குமார், லோக்சபா தேர்தலில் பூல்பூர் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்கின்றன தகவல்கள். பூல்பூர் தொகுதியை நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கவும் காரணங்கள் இருக்கின்றனவாம். நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு 1952, 1957, 1962 ஆகிய 3 தேர்தல்களில் போட்டியிட்டு பிரதமரான தொகுதி இது. 1971-ல் விஸ்வநாத் பிரதாப் சிங் இங்குதான் போட்டியிட்டு வென்றார். இவர்தான் பின்னாளில் மண்டல் நாயகன் என போற்றப்படும் இந்திய சரித்திரத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட புரட்சியாளர் "வி.பி.சிங்". இந்த சரித்திரப் பின்னணியில்தான் பூல்பூர் லோக்சபா தொகுதியை நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கிறார் என கூறப்படுகிறது.
ஸரவண் குமார் சொன்னது என்ன?: இது தொடர்பாக பீகார் அமைச்சர் ஸரவண் குமார் கூறியதாவது: நிதிஷ்குமாருக்கு பிரதமராக வேண்டும் என்ற விருப்பம் எதுவும் இல்லை. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் "இந்தியா" கூட்டணி ஆட்சி அமைத்தாக வேண்டும் என்பதுதான் நிதிஷ்குமார் இலக்கு. ஆனால் பீகார், உ.பி., சத்தீஸ்கர் மாநில மக்கள், நிதிஷ்குமார்தான் திறமையான பிரதமர் வேட்பாளர் என விரும்புகின்றனர். பூல்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவது பற்றி நிதிஷ்குமார் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றார். 1985-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பீகாரின் ஹர்னாட் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் நிதிஷ்குமார். அதன்பின்னர் எந்த ஒரு சட்டசபை தேர்தலிலும் நிதிஷ்குமார் போட்டியிட்டது இல்லை. ஆனால் எம்.எல்.சி. பதவி மூலமே பீகார் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்து வருகிறார் நிதிஷ்குமார். ஆனால் லோக்சபா தேர்தல்களில் ஏற்கனவே 6 முறை போட்டியிட்டு வென்றுள்ளார் நிதிஷ்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications