பாட்னாவில் “பக்கா” பிளான்.. பாஜகவை வீழ்த்த கூடும் கட்சிகள்! ஸ்டாலினின் அட்வைஸ் - தலையசைத்த நிதீஷ்
பாட்னா: முதலமைச்சர் முக ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சிகளின் மாநாட்டை ஜூன் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க நிதீஷ் குமார் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் ஆட்சிகாலம் நிறைவடைய இன்னும் ஓராண்டே மீதம் இருக்கிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்போதே இறங்கி இருக்கின்றன.

மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைவதை தடுக்க பல்வேறு முயற்சிகளில் எதிர்க்கட்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரஸ் தலைமையில் பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்து மாநில கட்சிகள், தேசிய கட்சிகளை இணைத்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒரே அணியாக போட்டியிட வைக்க ஓராண்டுக்கும் மேலாக முயற்சிகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் இதே விசயத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாஜக கூட்டணியில் இல்லாத மற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளும் இதே முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். இதை முழு மூச்சாக செய்து வருபவர் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார்தான்.
பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி ஆர்ஜேடி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த பிறகு அவர் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த ஓராண்டில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற நிதீஷ் குமார் எதிர்க்கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து பேசி உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, அதேபோல் சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப்) கட்சித் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார்.
ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னனி தலைவர் பத்ருதீன் அஜ்மல் ஆகியோரையும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் சந்தித்து பேசி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லி சென்ற நிதிஷ் குமார் அம்மாநில முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசி உள்ளார். அவருடன் தேஜஸ்வி யாதவும் சென்று உள்ளார். இதேபோல் அண்மையில் அர்விந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மானும் சென்னைக்கு வந்த முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோரையும் நிதீஷ் குமார் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜூன் 20 ஆம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி கோட்டத்தை நிதிஷ் குமார் திறந்து வைத்துச் சிறப்பிக்க உள்ளதாக திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார் நிதீஷ் குமார். ஜூன் 12 ஆம் தேதி இந்த கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தை தள்ளி வைக்குமாறு காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டு உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினும் தள்ளி வைக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜூன் 23 ஆம் தேதி கூட்டத்தை கூட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களிடம் நிதீஷ் குமார் கேட்டுள்ளாராம். அதே நேரம் கட்சிகளின் பிரதிநிதிகளை அனுப்பாமல் தலைவர்களே இதில் பங்கேற்க வேண்டும் என நிதீஷ் குமார் சொல்லி இருக்கிறார். இந்த நாள் உறுதி செய்யப்பட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் பாட்னாவுக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications