பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது உண்மைதான்.. முதல் முறையாக போட்டு உடைத்தார் மோடி

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்குறுதிகளை பற்றி முதல் முறையாக போட்டு உடைத்தார் மோடி- வீடியோ

    பாட்னா: வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது உண்மைதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். முதல் முறையாக பிரதமர் இவ்வாறு கூறியுள்ளது பாஜகவிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்ட நிலையில், பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஜமுய் மாவட்டத்தில் எல்.ஜே.பி வேட்பாளர் சிராக் பஸ்வானை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்தார்.

    நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தின் போது பேசியதாவது: எனது தலைமையிலான மத்திய அரசு, எங்களால் சொல்லப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லைதான்.

    காங். வாக்குறுதி எதிரொலி.. அருணாச்சலில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ்.. பாஜக அதிரடி!காங். வாக்குறுதி எதிரொலி.. அருணாச்சலில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ்.. பாஜக அதிரடி!

    70 வருஷம் இருந்தாங்களே

    70 வருஷம் இருந்தாங்களே

    70 வருடங்களாக காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தது. அவர்களால் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக கூற முடியவில்லை. எங்கள் அரசு வெறும் 5 வருடங்கள்தான் ஆட்சியில் உள்ளது. பிறகு எப்படி முழு வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும். இருப்பினும், பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்.

    இட ஒதுக்கீடு இருக்கும்

    இட ஒதுக்கீடு இருக்கும்

    இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித்துகள், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை பாஜக அரசு முடிவுக்கு கொண்டுவந்துவிடும் என்று கூறப்படுவதில் உண்மையில்லை. நாங்கள் இட ஒதுக்கீட்டில் கை வைக்கவே மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சவுக்கிதார் டிரெண்ட்

    சவுக்கிதார் டிரெண்ட்

    பிரதமர் தனது 28 நிமிட பேச்சில், 23 முறை சவுகிதார் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பாதுகாவலர் என்ற அர்த்தம் வரும் இந்த வார்த்தைக்கு கூட்டத்தில் வரவேற்பு அதிகம் உள்ளது. மோடி இதை குறிப்பிடும்போது கைத்தட்டல்கள் அதிகமாக உள்ளன.

    வேலைவாய்ப்பு

    வேலைவாய்ப்பு

    இதேபோல காங்கிரஸ் என்ற வார்த்தையை, 15 முறை நரேந்திர மோடி பயன்படுத்தினார். பாதுகாப்பு படையினர் தொடர்பாக 14 முறை வார்த்தைகளை பயன்படுத்தினார். ஆனால், வேலை வாய்ப்பு குறித்தோ, வேலைவாய்ப்பு இன்மை குறித்தோ, நரேந்திர மோடி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Prime Minister Narendra Modi while campaigning for LJP candidate Chirag Paswan in Jamui district of Bihar admitted that his government was not able to fulfill all the promises made by them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X