பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பாக்கு என்னாச்சு? சட்டென லாலு பிரசாத் மகனுக்கு போனை போட்ட மோடி! தழுதழுத்த தேஜஸ்வி! இதான் நாகரீகம்

Google Oneindia Tamil News

பாட்னா: லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மகனும் பீகார் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு போன் செய்து பிரதமர் மோடி பேசினார். அப்பாவுக்கு என்னாச்சு? இப்போது உடல்நலம் எப்படி இருக்கு? என அவர் கேட்டதற்கு தழுதழுத்த குரலில் தேஜஸ்வி யாதவ் பதிலளித்தார்.

பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ். ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான இவர் மத்திய அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார்.

நுபுர்சர்மாவின் தலையை துண்டிப்போருக்கு பரிசு அறிவித்த மதகுரு.. சுற்றிவளைத்த போலீஸ்! தீவிர விசாரணை நுபுர்சர்மாவின் தலையை துண்டிப்போருக்கு பரிசு அறிவித்த மதகுரு.. சுற்றிவளைத்த போலீஸ்! தீவிர விசாரணை

இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

படிக்கட்டில் தவறி விழுந்த லாலு

படிக்கட்டில் தவறி விழுந்த லாலு

இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் தனது மனைவி ராப்ரி தேவியுடன் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டு மாடி படிக்கட்டில் இருந்து லாலு பிரசாத் யாதவ் திடீரென்று தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தோள்பட்டை, முதுகில் அடிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

இதையடுத்து லாலு பிரசாத் யாதவை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது லாலு பிரசாத் யாதவ் நலமாக உள்ளார். இருப்பினும் அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளார். தற்போது லாலு பிரசாத் யாதவை ஒன்றுக்கும் மேற்பட்ட டாக்டர்கள் கண்காணித்து வருவதாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

போனில் பேசிய பிரதமர் மோடி

போனில் பேசிய பிரதமர் மோடி

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, லாலு பிரசாத்தின் மகனான தேஜஸ்வி யாதவுக்கு போன் செய்து பேசினார். அப்போது அப்பா லாலு பிரசாத் யாதவுக்கு என்னாச்சு? தற்போது உடல்நலம் எப்படி உள்ளது? என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளார். இதற்கு தேஜஸ்வி யாதவ் தழுதழுத்த குரலில் பதிலளித்துள்ளார்.

 கட்சி சார்பில் விளக்கம்

கட்சி சார்பில் விளக்கம்

இதுபற்றி ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் சித்ரஞ்சன் ககன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛பிரதமர் ந ரேந்திர மோடி, தேஜஸ்வி யாதவிடம் பேசி லாலு பிரசாத்தின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்'' என கூறப்பட்டு இருந்தது. பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் முதல்வராக இருக்கிறார். இங்கு பிரதான எதிர்க்கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
PM Narendra Modi enquired about the health of RJD supremo and former Bihar Chief Minister Lalu Prasad Yadav, who fractured his right shoulder after suffering a fall at his house in Patna.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X