ரயிலில் சார்ஜ் பாயிண்ட்டில் கெட்டில் வைத்து வெந்நீர் போட்ட இளைஞர்.. அடுத்த நொடியே நடந்த சம்பவம்
பாட்னா: பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்ற ரயிலில் சார்ஜிங் பாயிண்டில் கெட்டில் பயன்படுத்தி வெந்நீர் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பீகார் மாநிலம் கயாவில் இருந்து புதுடெல்லி்க்கு மகாபோதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் லே பகுதியை சேர்ந்த 36 வயது நபர் பயணம் செய்து கொண்டு இருந்தார். ரயிலில் வயதான பயணி ஒருவர் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதற்காக சுடு தண்ணீர் கிடைக்குமா என கேட்டதாக தெரிகிறது. இதனால், அவருக்கு உதவும் நோக்கில் லே பகுதியை சேர்ந்த நபர் தன்னிடம் இருக்கு எலக்ட்ரானிக் கெட்டிலை பயன்படுத்தி சுடு தண்ணீர் போட்டு கொடுத்துள்ளார்.

இது ரயில்வே போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அந்த நபர் மீது ரயில்வே சட்டம் பிரிவு 147 கீழ் வழக்குப்பதிவு செய்து மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அந்த நபருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடுமையான எச்சரிக்கையுடன் மாஜிஸ்திரேட்டு விடுவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், " ரயிலில் சார்ஜிங் பாயிண்ட்களில் செல்போன்கள் மட்டுமே சார்ஜ் செய்யலாம்.
அதைவிடுத்து மின்சாரத்தை இழுக்கும் மின் சாதனங்களை பயன்படுத்தினால் மின்கசிவு ஏற்பட்டு ரயிலில் தீ விபத்து உள்பட பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சம்பார்க் கரந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் சிலர் குளிர் காய்வதற்காக மாட்டு சாணத்தை கொண்டு தீ மூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயிரக்கணக்கான பயணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்ற முறையில் ரயிலுக்குள் தீ முட்டி குளிர் காயந்த இரு பயணிகளையும் அலிகார் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அந்த பயணிகள் இருவரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்து.
அண்மைக்காலமாக ரயில் விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது பயணிகள் பொறுப்பற்ற முறையில் அஜாக்கிரதையாக நடந்து கொள்வது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications