பீகார் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்தார் பிரசாந்த் கிஷோர்! தொகுதி இதுதான்
பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்திருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது. அதன் தலைவராக இருக்கும் நிதிஷ்குமார், பீகார் முதல்வராக தொடர்கிறார். இக்கட்சி, தேசிய அளவில் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால், காங்கிரஸ் நிதிஷ்குமார் ஆட்சியின் மீது கடுமையான விமர்சனங்களை அடுக்கி வருகிறது. இந்நிலையில் இம்மாநிலத்தில் பிரசாந்த் கிஷோர் போட்டியிட உள்ளதாக அறிவித்திருக்கிறார்.

முன்னதாக இது குறித்து பேசியிருந்த பிசாந்த் கிஷோர், "நிதிஷ் குமார் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக நிச்சயமாக போட்டியிடுவேன். ஒருவேளை அதற்கு எனது கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி போட்டியிட தயாராக இருக்கிறேன். 35 பேர் கொண்ட கட்சி குழுதான் யார் எங்கிருந்து போட்டியிடுவார்கள் என்று முடிவு செய்யும். என்னைப் பற்றியும் அவர்களே முடிவு செய்வார்கள்.
ஒருவர் தனது கர்மபூமியில் (பணிபுரியும் இடம்) அல்லது ஜன்மபூமியில் (பிறந்த இடம்) இருந்துதான் போட்டியிட வேண்டும். ஆகையால், ஜன்மபூமி கருத்தில் கொள்ளப்பட்டால், ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாராமின் கார்காஹர் தொகுதியில் இருந்துதான் போட்டியிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த தொகுதியில் தான் போட்டியிடப்போவது உறுதி என்று தற்போது கூறியுள்ளார்.
கார்காஹர் சட்டமன்றத் தொகுதியில் கிசோர் சார்ந்த உயர் சாதி பிராமண வாக்காளர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சந்தோஷ் குமார் மிஸ்ரா, ஜனதா தளம்-யுனைடெட் (JD-U) கட்சியின் பஷிஸ்ட் சிங்கை தோற்கடித்து கார்காஹர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகாரில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் நான்கு தொகுதிகளிலும் ஜன சுராஜ் கட்சி போட்டியிட்டது, ஆனால் எதிலும் வெற்றி பெறவில்லை. "மொத்த வாக்குகளில் 10% எங்களுக்கு கிடைத்தது, இது எங்களைப் போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட கட்சிக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது" என்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கிசோர் கூறியிருந்தார்.
நான்கு தொகுதிகளில் பெலகஞ்ச் மற்றும் ராம்கர் ஆகிய இரண்டு தொகுதிகளில் எதிர்க்கட்சியான ஆர்ஜேடி வேட்பாளர்களுக்கு ஜன சுராஜ் கட்சி தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த இரண்டு தொகுதிகளும் நீண்ட காலமாக ஆர்ஜேடிக்கு பலமான தொகுதிகளாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications