திடீரென அந்த இடத்தில் வந்த வலி! துடிதுடித்த தேஜஸ்வி யாதவ்.. நடக்க முடியாமல் தள்ளாடிய சோகம்! வீடியோ
பாட்னா: பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவின் உடலில் திடீரென்று ஏற்பட்ட மாற்றத்தால் அவர் துடிதுடித்துப்போனார். மேலும் அவர் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து போலீஸ் மற்றும் நிர்வாகிகள் அவரை கைத்தாங்கலாக அழைத்து சென்றனர். அதுபற்றி விபரம் வருமாறு:
பீகாரில் பாஜக மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்கு லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன.

லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அமைத்துள்ளது. அதேவேளையில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இந்த மாநிலத்தில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட உள்ளது. தற்போது 2 கட்டங்களாக 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 31 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஆர்ஜேடி கட்சியின் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இன்று பீகாரில் பிரசாரம் செய்தார். மேடையில் இருந்த அவர் திடீரென்று அசவுகரியமாக உணர்ந்தார். அதிகப்படியான முதுகுவலி ஏற்பட்டால் அவர் துடிதுடித்தார். இருக்கையில் அவரால் அமர முடியவில்லை.

இதையடுத்து நிகழ்ச்சியை முடித்து அவர் புறப்பட்டபோது அவரால் நடக்க முடியவில்லை. நடக்க முயன்ற அவர் தள்ளாடினார். இதையடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் போலீசார் அவரை கைத்தாங்கலாக மேடையில் இருந்து அழைத்து வந்து காரின் இருக்கையில் அமர வைத்தனர். அதன்பிறகு அவர் காரில் புறப்பட்டு சென்றார்.
பீகாரில் பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை வீழ்த்தும் முனைப்பில் தேஜஸ்வி யாதவ் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மாநிலம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதிகப்படியாக அவர் காரில் பயணம் மேற்கொள்வதால் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications