சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் களம்.. ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் வேட்புமனு தாக்கல்!
பாட்னா: லாலு பிரசாத்தின் குடும்ப தொகுதியாக கருதப்படும் ராகோபூர் தொகுதியில், போட்டியிட தேஜஸ்வி யாதவ் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
கடந்த 1995ம் ஆண்டு முதல் லாலு பிரசாத்தின் குடும்பம்தான் இந்த தொகுதியில் வெற்றி பெற்று வந்திருக்கிறது. கடந்த 2 தேர்தல்களிலும் தேஜஸ்வி வெற்றி பெற்றிருக்கிறார். எனவே, இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிப்பார் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

- 1995 - லாலு பிரசாத்
- 2000 - லாலு பிரசாத்
- 2005 - ராப்ரி தேவி (லாலுவின் மனைவி) - 71,960(48.76%) வாக்குகளை பெற்றிருந்தார்
- 2010 - சதீஷ் குமார் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்) - 64,222 (48.06%) வாக்குகளை பெற்றிருந்தார்
- 2015 - தேஜஸ்வி யாதவ் (லாலுவின் மகன்) - 91,236(49.15%) வாக்குகளை பெற்றிருந்தார்
- 2020 - தேஜஸ்வி யாதவ் - 97,404(48.74%) வாக்குகளை பெற்றிருந்தார்
பீகாரில் தற்போது நிதிஷ்குமார் முதல்வராக இருக்கிறார். இவருடைய ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. மறுபுறம் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் 'மகாபந்தன்' கூட்டணியை அமைத்திருக்கின்றன.
தேஜஸ்வியின் வேட்புமனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் திவாரி, "மகாகத்பந்தன் கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லாமல், இந்தக் கூட்டணி ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. மக்களின் பேராதரவு மற்றும் ஆசீர்வாதத்துடன் பீகாரில் தேஜஸ்வி அரசு நிச்சயம் அமையும்.
இது பாஜக தலைமையினாலான என்டிஏ கூட்டணியின் விடைபெறும் காலம். உபேன் குஷ்வாஹா கூட சில பிரச்சனைகள் இருப்பதாகக் கூறியுள்ளார். ஜிதன் ராம் மாஞ்சி, நிதிஷ் குமார் என அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். என்டிஏ என்பதற்கு 'இந்த முறை படகு மூழ்கும்' என்பதே இப்போது அர்த்தம். பீகார் இப்போது தேஜஸ்வி அரசை விரும்புகிறது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடும் 57 வேட்பாளர்களை கொண்ட, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நிதிஷ்குமார் வெளியிட்டார். 243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்குகள் நவம்பர் 14 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications