7 லட்சம் கோடிக்கு வாக்குறுதிகள்! இதெல்லாம் நடக்குற காரியமா? நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் அட்டாக்!
பாட்னா: பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு, தேர்தலுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றவே முடியாது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் அந்த அளவுக்கு நிதி அரசிடம் இல்லை என்றும் விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசியதாவது, "சமீபத்தில் அரசு வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் நான் முன்பு அளித்த வாக்குறுதிகளின் நகல். வரவிருக்கும் தேர்தல்களுக்குப் பிறகு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை முறியடிக்க எதிர்க்கட்சிகளுக்கு மாற்றுத் திட்டம் இருக்கிறது.

அரசு அறிவித்துள்ள பல சலுகைகள், வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டவை. வாக்குறுதியை நிறைவேற்ற ரூ.7 லட்சம் கோடி செலவாகும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு போதுமான வருவாய் இல்லை. நிதீஷ்குமார் அரசு காப்பியடிக்கிறது. எங்களின் மாற்று திட்டத்தை தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் வெளியிடுவோம். இப்போது பாஜகவுடன் நிதிஷ்குமார் கூட்டணியில் இருக்கலாம்.
ஆனால், ஒரு காலத்தில் எங்களுடன் கூட்டணியில் இருந்தபோது, பீகார் ஊழல் குறித்து பிரதமர் மோடி சரமாரியாக விமர்சித்திருந்தார். ஊழல் பற்றி பேசிய மோடி, அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். பீகார் இப்போது ஊழல் மற்றும் வேலையிண்மை எனும் டைம் பாம் மீது அமர்ந்திருக்கிறது. இது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்" என்று விமர்சித்திருக்கிறார்.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இக்கட்சியின் தலைவரான நிதிஷ்குமார் முதலமைச்சராக இருக்கிறார். அவர் 9 முறை தொடர்ந்து முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் தற்போது பாஜக கூட்டணியில் இருக்கிறார். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ்குமாரை வீழ்த்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒன்றாக கை கோர்த்திருக்கின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் சர்ச்சை நடவடிக்கை
முன்னதாக பீகார் இந்திய தேர்தல் ஆணையம், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொண்டது. அதாவது ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலை கணக்கில் கொள்ளாமல், புதியதாக வாக்காளர் பட்டியலை உருவாக்கும் நடவடிக்கைக்கு பெயர்தான் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம். இந்த பணியின்போது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலரின் பெயரை தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை. பாட்னா போன்ற நகரங்களில் ஆதார் அட்டையை அடையாள சான்றாக ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், வங்கதேச எல்லையை ஒட்டிய பகுதியில் ஆதாரை ஏற்கவில்லை. இதனையடுத்து இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு, பின்னர் ஆதார் அடையாள சான்றாக ஏற்கப்பட்டது.
இருப்பினும் சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் பெயர் புதிய வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தது. விட்டபட்டவர்கள் குறித்து கூறும்போது, உயிரிழந்தவர்கள், வெவ்வேறு முகவரில் ஒரே நபர் வாக்காளர் அட்டையை வைத்திருப்பது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு டெலிட் செய்யப்பட்டது என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கும் குற்றச்சாட்டகள் கவனம் பெற்றிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications