"இதுதான் எனது கடைசி தேர்தல்.." பீகார் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்த நிதிஷ் குமார்
பாட்னா: இந்த பீகார் சட்டசபை தேர்தல்தான், தனது கடைசி தேர்தல் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீகாரில் தற்போது மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இரு கட்ட தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் மூன்றாவது கட்ட தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது, இதையொட்டி இன்றுடன் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது.

புர்னியா என்ற பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார் நிதிஷ்குமார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: இந்த தேர்தல்தான் நான் போட்டியிட போகும் கடைசி தேர்தல். இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிகின்றன. நாளை மறுநாளுடன் பீகார் தேர்தல் முடிவடைகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டணிகள் தாவினாலும் கூட, 15 வருடங்களாக பீகார் மாநிலத்தில் முதல்வராக இருப்பவர் நிதிஷ்குமார். எனவே அவரது இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதேநேரம், நிதிஷ் குமாருக்கு எதிராக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி மற்றும் சமீபத்தில் நிதிஷ்குமார்-பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற சிராக் பாஸ்வான் ஆகியோர், நிதிஷ் குமாருக்கு எதிிராக, தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருவதால், அதிலிருந்து சமாளிப்பதற்காக மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கக்கூடும் என்றும் தெரிகிறது.
முன்னதாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிஹார் மாநிலத்தில் பிரச்சாரம் செய்தபோது, சிஏஏ குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து அவரை கடுமையாக விமர்சனம் செய்து நிதிஷ்குமார் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications