பாஜகவை தூக்கி எறிய மக்கள் ரெடியாகி விட்டார்கள்.. போட்டு தாக்கும் அகிலேஷ் யாதவ்.. மிரளும் கட்சிகள்

சமாஜ் வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் பாஜகவை விமர்சித்து வருகிறார்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: படேலின் காலடி தடங்களை பின்பற்றுவதாக பாஜக தலைவர்கள் சொல்கிறார்களே, ஆனால், இன்னைக்கு விவசாயிகள் வறுமையில் இருக்கிறார்கள்.. அவர்களின் வருமானம் உயராமல் அப்படியே இருக்கிறது.. உபியில் சட்டம் ஒழுங்கும் மோசமாக உள்ளது.. அதனால் பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய இம்மாநில மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உபியில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... எனவே, அனைத்து கட்சிகளுமே இப்போதே தேர்தல் களத்தில் பிஸியாகிவிட்டன..

இதற்கான தீவிர பிரச்சாரத்தையும் அகிலேஷ் யாதவ் முன்னெடுத்துள்ளார்.. செல்லுமிடமெல்லாம் பாஜகவை சரமாரியாக விமர்சித்து கொண்டிருக்கிறார்.

விவசாயிகள்

விவசாயிகள்

"பாஜகவின் தாமரை பொய் மற்றும் வஞ்சகம் என்ற நிலத்தில் வளர்கிறது... அந்த கட்சி தன்னுடைய அறிக்கையை மறந்துவிட்டது. விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலையை பெற முடியவில்லை. லகிம்பூரில் தங்கள் விளைபொருட்களை விவசாயிகள் எரிக்கின்றனர்.... தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்குமா? என்று எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர்.. ஆனால், அவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து யாருமே பதிலளிக்கவில்லை" என்று பாஜகவின் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறார்..

புதுவியூகம்

புதுவியூகம்

அதுமட்டுமல்ல, இந்த முறை தேர்தலில் அகிலேஷ் யாதவ் இன்னொரு அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளார்.. இத்தனை காலம் அதாவது இவரது தந்தை முலாயம் சிங் யாதவ் காலத்தில் இருந்தே யாதவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டு வந்த நிலையில், இந்த முறை அகிலேஷ் தன்னுடைய தேர்தல் வியூகத்தை மாற்ற நினைக்கிறார்.. அதன்படி தலித்துகளுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க திட்டமிட்டு வருகிறார்.

அதிருப்தி

அதிருப்தி

இதனிடையே, அதிருப்தி தலைவர்கள் கட்சி தாவும் சம்பவமும் அரங்கேற தொடங்கி விட்டது. அவ்வகையில், பாஜகவை சேர்ந்த ஒரு எம்எல்ஏ, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளனர். கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில், அவர்கள் தங்களை சமாஜ்வாடி கட்சியில் இணைத்துக்கொண்டனர்..

 விசாரணை

விசாரணை

இந்நிலையில், நேற்று, ஹர்தோயில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மக்கள் முன் பேசும்போது சொன்னதாவது: "காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.. ஏன் என்றால் காங்கிரஸ் என்பது பாஜக.. பாஜக தான் காங்கிரஸ்.. எங்களுக்கும், மற்ற தலைவர்களுக்கும் எதிராக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை நடந்து வருவதற்கு காரணமே காங்கிரஸ் கட்சிதான்.

 தலைவர்கள்

தலைவர்கள்

பாஜக தலைவர்கள் சர்தா வல்லபாய் படேலின் காலடி தடங்களை பின்பற்றுவதாக சொல்கிறார்கள், ஆனால் இன்று விவசாயிகள் அதே கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள்.. அவர்களின் வருமானம் அப்படியே இருக்கிறது.. அது இரட்டிப்பாகவில்லை... உபி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது... அதனால் பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய மக்கள் முடிவு செய்துள்ளனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+