பீகார் டெஸ்ட்..டபுள் செஞ்சுரி அடித்த NDA! மொத்தமாய் சரிந்த INDIA விக்கெட்! ’பிட்ச்’ ரிப்போர்ட் என்ன?
பாட்னா: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பிஹார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று இந்திய கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. பெரும் நம்பிக்கையோடு களம் இறங்கிய 'மகாகத்பந்தன்' எனும் இந்தியா கூட்டணி வெறும் 35 இடங்களை மட்டுமே வென்றது. பீகாரில் யாதவ் - இஸ்லாமிய சமூக வாக்குகளை அதிகமாகக் கொண்ட ஆர்ஜேடி இந்த தேர்தலில் படுதோல்வியை சந்திக்க என்ன காரணம்? கள நிலவரம் சொல்வது என்ன? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடனேயே, நாடு முழுவதும் ஒரு பெரிய விவாதம் எழுந்தது. பீகாரின் எதிர்க்கட்சிகள் எப்படி இவ்வளவு மோசமாகத் தோல்வியை சந்தித்தன என்பது தான் அந்த கேள்வி. மொத்தம் 243 இடங்கள் கொண்ட மாநிலத்தில் ஆளும் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.
அதே வேளையில், மிகுந்த நம்பிக்கையுடன் தேர்தலுக்கு களமிறங்கிய ஆர்ஜேடி தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணி வெறும் 35 இடங்கள் மட்டுமே பெற்றது. குறிப்பாக பீகார் அரசியலை பல ஆண்டுகள் தீர்மானித்த ஆர்ஜேடி தனியாக பெற்றது வெறும் 25 இடங்கள் தான்.

பீகார் தேர்தல்
பீகார் அரசியலில் யாதவ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஆர்ஜேடியின் அடிப்படை வாக்காளர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் இந்த முறை இவர்கள் இருவரும் ஒரே திசையில் திரண்டு ஆர்ஜேடிக்கு வாக்களிக்கவில்லை. இதற்கான காரணங்கள் பல உள்ளன. மெகா கூட்டணியின் நிலவிய யார் பெரியவர் உள்ளிட்ட பிரச்சனைகளில் தொடங்கி, தேர்தல் நேரத்தில் வியூகங்களில் செய்த தவர் வரை நீண்டு கொண்டே செல்கிறது.
ஆர்ஜேடி தோல்வி
தேர்தலுக்கு முன்பே தேர்தல் ஆணையம் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை பீகாரில் அமல்படுத்தியது. இதை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் யாத்திரை நடத்தினார். யாத்திரை நடைபெறும் போது தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஆர்ஜேடி வலியுறுத்தியது. ஆனால் இதற்கு காங்கிரஸ் உடனடியாக உடன்படாததால் கூட்டணிக்குள் நம்பிக்கையின்மை உருவானது. தேஜஸ்வி டெல்லி சென்று பிரச்சனையை பேசி தீர்க்க முயன்றபோதும் ராகுல் அவரைச் சந்திக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கியது.
இந்தியா கூட்டணி
மேலும், விஐபி கட்சி தலைவர் முகேஷ் சாஹ்னியை துணை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது மற்றொரு சர்ச்சையை உருவாக்கியது. பீகாரில் மகாதலித் சமூகத்தை அந்நியப்படுத்திய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாஜக கொளுத்திப் போட தேர்தலில் இது மெகா கூட்டணிக்கு பெரிய பின்னடைவைத் தந்ததாகக் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 20 சதவீதம் இருக்கும் முஸ்லிம் மக்கள் இருக்கும் பீகாரில், ஒவைசியின் AIMIM கட்சியை கூட்டணியில் சேர்க்க மறுத்தது கூட அந்த சமூக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஓவைசி வாக்கு பிளவு
இதன் விளைவாக AIMIM பல இடங்களில் வாக்குகளைப் பிரித்து விட, நேரடியாக NDA-வுக்கு பலனும், மெகாகூட்டணிக்கு பலத்த அடியும் கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, காங்கிரஸின் ராகுல் காந்தியின் பிரச்சாரமும் மக்கள் மனதில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ககரியா பிரச்சாரத்தின் போது மீனவர்களுடன் தண்ணீர் இறங்கி மீன் பிடித்த காட்சி வைரலானாலும், அது வாக்குகளை பெற்றுக் கொடுக்கவில்லை. பிரியங்கா காந்தியின் பிரச்சாரமும் இதேபோல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பிரசாந்த் கிஷோர்
முக்கியமாக, தேர்தல் வியூக நிபுணராகப் பெயர் பெற்ற பிரசாந்த் கிஷோர் உருவாக்கிய ஜன் சுராஜ் கட்சி, பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரித்து, NDAக்கு மறைமுக ஆதாயத்தை ஏற்படுத்தியதையும் கவனத்தில் கொள்ளவில்லை. எல்லா காரணங்களையும் சேர்த்து பார்க்கும்போது, மெகா கூட்டணியால் எளிதில் ஆட்சி மாற்றம் கிடைக்கும் என்று நம்பியிருந்த கணிப்புகள் முற்றிலும் தவறானது. NDA மீது மக்கள் அதிருப்தி இருந்தாலும், எதிர்க்கட்சிகள் அதற்கு மாற்றாக பெரும் நம்பிக்கையைக் கொடுக்க முடியாத நிலையால் தான் இந்தத் தேர்தல் முடிவுகள் மாறியது என்கின்றனர் பீகார் அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் அரசியல் பார்வையாளர்கள்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications