கெஞ்சி கேட்டாலும் நோ சான்ஸ்! நான் அந்த கூட்டணிக்கு போக மாட்டேன்..பரபரப்பை கிளப்பிய நிதிஷும் பாஜகவும்
பாட்னா: இந்தியா கூட்டணி மீது அதிருப்தியில் இருப்பதாகவும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப போவதாக வெளியான தகவலை நிதிஷ் மறுத்துள்ளார். அதேவேளையில், நிதிஷ்குமார் கெஞ்சி கேட்டாலும் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என பாஜக தெரிவித்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து பீகாரில் கூட்டணி ஆட்சியை நிதிஷ் குமார் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணியை அமைத்து ஆட்சி அமைத்துள்ளார். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள "இந்தியா" கூட்டணியில் நிதிஷ் குமாரின் பங்கும் மிக முக்கியமானதாக இருந்தது.

காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தையும் பாட்னாவில் நிதிஷ்குமார் நடத்தினார். பாஜகவை மீண்டும் ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதில் இந்தியா கூட்டணி தீவிரம் காட்டி வரும் நிலையில், திடீரென ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணிக்கு திரும்ப இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
பாரதிய ஜன சங்க தலைவர் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளையொட்டி பாட்னாவில் பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பங்கேற்று, உபாத்யாயா சிலைக்கு மரியாதை செலுத்தினார். பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி முடிந்த பிறகு நிதிஷ்குமாரிடம் , மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்ப உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், "இது அர்த்தமற்ற பேச்சு.. அப்படி எந்த திட்டமும் இல்லை" என்றார். மேலும், " இந்தியா" கூட்டணியில் பிரதமர் ஆவதற்கு நிதிஷ்குமார் தான் தகுதியான நபர் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மகேஸ்வர் ஹசாரி கூறியது குறித்து நிதிஷ்குமாரிடம் கேட்ட போது, இதுபோன்ற கருத்துகளை பேச வேண்டம் என அறிவுறுத்தியிருக்கிறேன். எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இல்லை. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மட்டுமே எனது நோக்கம்" என்றார்.
இதற்கிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப மாட்டோம் என்று நிதிஷ்குமார் கூறியது பற்றி பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில் குமார் மோடியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த சுஷில் குமார் மோடி, "எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்க வாய்ப்பில்லை. நிதிஷ் குமாரை ஏன் நாங்கள் மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும். அவருக்கான கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. நிதிஷ் குமார் கெஞ்சி கேட்டாலும் அவரை நாங்கள் (பாஜக)சேர்த்துக்கொள்ள மாட்டோம்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications