Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரம்பலூரே அசந்துடுச்சு.. குஷியில் அரியலூர்.. அட, பாரிவேந்தருக்கு வந்த "பச்சை சிக்னல்".. அப்ப அதேதானா

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதிக்கு நல்ல செய்தி டெல்லியில் இருந்து கிடைத்துள்ளது.. இதனால் ஐஜேகே படுகுஷியில் காணப்படுகிறது.. என்ன நடந்தது?

பெரம்பலூர் பகுதிக்கு பல வருடங்களாகவே, ரயில் பாதை கிடையாது.. எனவே, அரியலூரிலிருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று பெரம்பலூர் மக்கள் பல காலமாகவே கோரி வருகிறார்கள்.

Happy news for Perambalur Ariyalur Namakkal and Can Parivendhar alliance with BJP

ஆய்வுகள்: இதையடுத்து, அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் வரை 108 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே பாதை அமைப்பதற்காக கள ஆய்வு நடத்தப்பட்டும்கூட, திட்டம் தொடங்குவது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதற்கு பிறகுதான், பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார்.. பெரம்பலூர் பகுதிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்து வந்தார்..

மார்ச் மாதம்: அத்துடன், இது தொடர்பாக மத்திய ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியிருந்ததுடன், இந்த ரயில் கொண்டுவரப்பட்டால், விவசாயிகள், தொழில்துறையினர் உட்பட அனைவருக்குமே நன்மை பயக்கும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன், கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடியை சந்தித்து இது தொடர்பாக மனுவையும் அளித்திருந்தார்.

Happy news for Perambalur Ariyalur Namakkal and Can Parivendhar alliance with BJP

இப்போது விஷயம் என்னவென்றால், பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் தந்துவிட்டது..

கடிதம்: இது தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தில், "அரியலூர் மற்றும் நாமக்கல் (116.26 கி.மீ.) புதிய பாதைக்கான இறுதி இட ஆய்வு அனுமதிக்கப்பட்டு, கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும், இந்த ஆய்வின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் மத்திய ரயில்வே அமைச்சகம் கூறியிருந்தது. இந்த திட்டம் தொடர்பான கடிதத்தையும், பாரிவேந்தருக்கு இந்திய ரயில்வே துறை கடிதம் அனுப்பியுள்ளது.

பாரிவேந்தரின் முயற்சியில் மத்திய அரசு, இந்த திட்டத்தை தொடங்கி உள்ள நிலையில், தொகுதியில் பாரிவேந்தரின் செல்வாக்கு எகிறி வருகிறது.. தற்சமயம், உதயசூரியன் சின்னத்தில் எம்பியாக இருக்கிறார் பாரிவேந்தர்.. ஆனால், வரப்போகும் தேர்தலில் பாரிவேந்தருக்கு பாஜக வலைவீசியதாகவும், பெரம்பலூர் தொகுதியையே பாரிவேந்தருக்கு மறுபடியும் பெற்று தருவதாக பாஜக பாரிவேந்தருக்கு உறுதி தந்திருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் பரபரத்தன..

Happy news for Perambalur Ariyalur Namakkal and Can Parivendhar alliance with BJP

திமுக கூட்டணி: திமுக கூட்டணியை விட்டுவிட்டு, பாஜகவுக்கு பாரிவேந்தர் கூட்டணி வைக்க ஒரு காரணம் சொல்லப்படுகிறது.. இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள தங்களது கல்லூரிகளை சிக்கலின்றி நடத்தி செல்வதற்கு, பாஜகவின் தயவு மட்டுமே தேவையாக உள்ளதாம்.. அதனால்தான் தமிழக அரசியலையும் தாண்டி, மத்திய பாஜகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளதாம் பாரிவேந்தர் தரப்பு..

இப்படிப்பட்ட சூழலில், ரயில்வே திட்டம் தொடர்பான பாரிவேந்தரின் கோரிக்கையையும் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளதால், பெரம்பலூர் ஐஜேகே படுகுஷியில் உள்ளது.. அப்ப பெரம்பலூர் கன்பார்ம்டு போல..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+