Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரம்பலூர் தீபா டீச்சரை காணோமாமே? அந்த காரில் எட்டிப்பார்த்தால்? வளையத்துள் ஆபாச "சயின்ஸ் வாத்தியார்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: சயின்ஸ் வாத்தியார் ஒருவழியாக சிக்கிவிட்டார்.. ஆனால், தீபா டீச்சரைதான் காணவில்லை.. பெரம்பலூரே பெரும் பரபரப்பாகிவிட்டது.

கடந்த டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடைபெற்றது.. கோவை உக்கடம் ராமர் கோவில் அருகே ஒரு காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பின்பக்கம், 3 நாட்களாக ஒரு கார் அனாதையாக நின்று கொண்டிருக்கவும், போலீசார் விரைந்து வந்து காரை சோதனையிட்டார்கள்.

Perambalur Government School Teacher and what did police say about Maths, Science Teachers

ரத்தக்கறை: காருக்குள் நிறைய ரத்தக்கறை படிந்திருந்தது... ஒரு சுத்தியல், ஒரு போர்வை, ஒரு துண்டு இருந்தன.. சுத்தியலில், மட்டும் ரத்தக்கறை படிந்திருக்கிறது. அந்த கார் யாருடையது என்ற விசாரணையில் இறங்கியபோது, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது...

இந்த நேரத்தில், பாலமுருகனின் மனைவி தீபாவையும் காணவில்லை என்று தகவல் வெளியானது. தீபா ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.. வழக்கம்போல், சம்பவத்தினத்தன்றம், ஸ்கூலுக்கு போகும்போது, பாலமுருகனின் காரை எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அதோடு தீபா வீட்டுக்கு வரவில்லை.. இதனால், பதறிப்போன பாலமுருகன், மனைவியை காணவில்லை என்று பெரம்பலூர் போலீசில் புகார் தந்துள்ளார்.

மிஸ்ஸிங்: இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரிக்கும்போது, அன்றைய தினம், தீபாவுடன் வேலைபார்க்கும் ஆசிரியரும் மிஸ்ஸானது தெரியவந்தது. அதனால் 2 பேரையுமே பெரம்பலூர் போலீசார் தேட ஆரம்பித்தார்கள்.

தீபாவின் காரில் ரத்தக்கறை இருந்ததால், தீபாவுக்கும், அந்த ஆசிரியருக்கும் ஏதாவது தகராறு ஏற்பட்டிருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை ஆரம்பமானது. இதை கண்டுபிடிக்கவே, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதாவது, காரை பறிமுதல் செய்த கோவை போலீசாரும், கணவரின் புகாரை பதிவு செய்த பெரம்பலூர் போலீசாரும், ஒன்று சேர்ந்து இந்த வழக்கை கையில் எடுத்தனர். பெரம்பலூர் போலீசார் கோவையிலேயே முகாமிட்டு விசாரணையை விரைவுப்படுத்தினர்.

மாற்றுதிறனாளி: மாயமான தீபா டீச்சருக்கு 42 வயதாகிறது.. பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணக்கு டீச்சராக உள்ளார்.. இவர் ஒரு மாற்றுத்திறனாளியும் கூட.

இதே பள்ளியில், பணியாற்றும் ஆசிரியர் பெயர் வெங்கடேசன்.. 44 வயதாகிறது.. அறிவியல் ஆசிரியராக உள்ளார். 2 பேருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது.. தீபாவின் கணவர் புகார் தந்ததுபோலவே, சயின்ஸ் வாத்தியார் வீட்டிலும், அவர் மாயமானதாக புகார் தந்தனர்.. இதனால், வி.களத்தூர் போலீசார் ஆசிரியரை தேடி வந்தனர். அத்துடன், அவரது செல்போனும் கண்காணிக்கப்பட்டே வந்தது.

அப்போதுதான், கோவையில் மோகன் என்ற பாலியல் புரோக்கருக்கு சயின்ஸ் வாத்தியார் போன் செய்துள்ளார்.. இதனால், உடனே போலீசார், அந்த பாலியல் புரோக்கரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பாலியல் பெண்கள்: சயின்ஸ் வாத்தியார் வெங்கடேசன், பாலியல் பெண்களுடன் அடிக்கடி உல்லாசமாக இருப்பாராம். இதற்காக பெண்களுக்கு பணத்தை வாரி இறைப்பாராம்.. மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட இடங்களில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததுடன், அங்கிருக்கும் ஏடிஎம்களிலும் பணம் எடுத்திருக்கிறார். சிசிடிவி கேமராக்களில் ஆசிரியர் வெங்கடேசனின் முகம் பதிவாகியிருந்தது.

ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சயின்ஸ் வாத்தியார், தன்னுடைய சிம்கார்டுகளை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருப்பாராம்.. அதேபோல, தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றிக் கொண்டேயிருப்பாராம். இதனால், சயின்ஸ் வாத்தியாரை பிடித்தால்தான், கணக்கு டீச்சரின் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவரும் என்பதால், போலீசார் மும்முரமாக தேடி வந்தனர்.

வெங்கடேசன் மனைவி: கடந்த மாதம் ஆசிரியர் வெங்கடேசனின் மனைவி காயத்ரி உள்ளிட்ட அவர்களது உறவினர்கள் 3 பேர் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி போலீஸார் கைது செய்தனர். அப்போதுகூட, சயின்ஸ் வாத்தியார் வெங்கடேசன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை..

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் ஆசிரியர் வெங்கடேசன் பதுங்கி இருப்பதாக பெரம்பலூர் தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், வெங்கடேசனை அதிரடியாக கைது செய்தனர்.

பரபரப்பு: அவரை பெரம்பலூர் அழைத்து வந்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.. இந்த விசாரணை முழுமையாக முடிந்தால்தான், தீபா டீச்சர் என்ன ஆனார் என்பது குறித்து தெரிய வரும்.. எனினும், போலீஸாருக்கு டிமிக்கி தந்து, தண்ணி காட்டி வந்த வெங்கடேசன், தற்போது போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் விழுந்துள்ளார்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+