பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டில் யாரிது? கருணை இல்லத்தில் மகிழ்ச்சியில் நின்ற ஹரியானா அண்ணன்! அனிதா அசத்தல்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம், சோஷியல் மீடியாவில் வெளியாகி அனைவருக்குமே மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட வட மாநில குடும்பத்தினரும் நெகிழ்ந்து போய் உள்ளனர்.. இந்த சம்பவம் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது. அப்படி என்ன நடந்தது பெரம்பலூர் சமுத்திரம் கிராமத்தில்?
பெரம்பலூர் தீரன் நகர் எறைய சமுத்திரம் என்ற கிராமத்தில் "வேலா கருணை இல்லம்" செயல்பட்டு வருகிறது. அதாவது, ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெறும் இடமாகும்.. அனிதா என்பவர் இதன் நிர்வாகி ஆவார்.

அரசு நிதியுதவி
மனநலம் பாதிப்பு அடைந்த நபர்களுக்கு தலா ரூ.1,200 ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது.. இந்த கருணை இல்லத்தில், காப்பாளர், சமையலர், தொழிற்கல்வி பயிற்றுநர், தன்னார்வலர்கள், டிரைவர், பொறுப்பு அலுவலர், செக்யூரிட்டிகள் என பலரும் பணிபுரிந்து வருகிறார்கள.. இவர்களுக்கு அரசின் மூலமாக ஊதியமும் வழங்கப்படுகிறது.
அதேபோல, மனரீதியாக பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் காப்பகத்தில் அளிக்கப்பட்டு வரும் சேவைகள், உடல்நலம் குறித்து மாவட்ட கலெக்டர் அடிக்கடி இந்த கருணை இல்லத்துக்கு வந்து கலந்துரையாடுவார். அப்போது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பகத்தில் வழங்கப்படும் தொழிற்பயிற்சிகள், பயிற்சி குறித்தும் கேட்டறிந்துவிட்டு செல்வார்.
சேவா கருணை இல்லம்
கடந்த மாதம் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் இந்த கருணை இல்லத்தில் நடந்தது.. அதாவது, மத்திய பிரதேசம் சட்னா என்ற மாவட்டத்தை சேர்ந்த ராம்லால் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு 60 வயதாகிறது..
10 வருடங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்ட சாலைகளில் சுற்றித்திரிந்துள்ளார்.. பிறகு மாவட்ட சமூக ஆர்வலர்கள், வேலா கருணை இல்லத்தில் கொண்டுவந்து ஒப்படைத்துவிட்டு சென்றார்கள்.. 10 வருடங்களாகவே மனநலம் சார்ந்த பயிற்சிகளும், மருத்துவ சிகிச்சையும் ராமலாலுக்கு தரப்பட்டு வந்தது. இதனால் 10 கழித்து ராம்லால் பூரணமாக குணமாகிவிட்டார். அதற்கு பிறகு மத்திய பிரதேச மாநிலத்தில் தன்னுடைய ஊர், பெயர், முகவரியை சொல்லி உள்ளார். பிறகு குடும்ப உறுப்பினர்களுக்கு முறையாக தகவல் தரப்பட்டது.
ராம்லால் குஷி
இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர் பெரம்பலூருக்கு ஓடோடி வந்தனர்.. அவர்களிடம் பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், ராம்லாலை ஒப்படைத்தார். 10 வருடங்களுக்கு ராம்லாலை பார்த்ததுமே குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். கலெக்டருக்கும், சேவா கருணை இல்லத்துக்கும் நன்றியை சொல்லிவிட்டு, ராம்லாலை உத்தரபிரதேசம் அழைத்து சென்றனர்.
இப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.. பெரம்பலூர், பழைய பஸ்ஸ்டாண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த ஒரு நபரை பெரம்பலூர் டவுன் போலீசார் கடந்த 2017 ஆகஸ்டு 14ம்தேதி மீட்டு, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதாவிடம் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் மனநல மருத்துவர்
அந்த நபருக்கு பெரம்பலூர் மனநல மருத்துவர் அசோக், வேலா கருணை இல்லத்தில் தொடர் சிகிச்சையை வழங்கி வந்தார்.. இதனால் அந்த நபர் குணமடைந்தார். பிறகு அவரிடம் யார் என்பது குறித்து மருத்துவ குழு கேட்டறிந்தபோது, ஹரியானா மாநிலம், கடலா ரேவாரி பகுதியைச் சேர்ந்த ஹர்சித் (எ) சந்தன்சிங் (32) என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து ஹர்சீத் தந்த முகவரியைக் கொண்டு, ஹரியான மாநிலத்திலுள்ள அவரது அண்ணன் பிரேம்குமார் என்பவரை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார்கள்..
திக்குமுக்காடிய பிரேம்குமார்
இதைக்கேள்விப்பட்டதுமே திக்குமுக்காடிப்போன பிரேம்குமார், பெரம்பலூர் வேலா கருணை இல்லத்திற்கு நேற்று ஓடோடி வந்தார்.. தன்னுடைய தம்பியை பார்த்ததுமே கட்டிப்பிடித்து நெகிழ்ந்து போனார்.. பிறகு சத்தன் சிங்கை, அண்ணன் பிரேம்குமாரிடம், பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து, வேலா கருணை இல்ல நிர்வாகி அனிதா மற்றும் மன நல மருத்துவர் அசோக் ஆகியோர் ஒப்படைத்தனர்.
தன்னுடைய சகோதரனை 8 வருடங்களாக பாதுகாப்பாகவும், மருத்துவ சேவை உள்ளிட்ட உதவிகளை வழங்கியும், பராமரித்து வந்த வேலா கருணை இல்ல நிர்வாகிகளுக்கு பிரேம்குமார் தன்னுடைய இரு கைகளையும் கூப்பி நன்றி சொன்னார்.. இந்த சம்பவம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications