புதுச்சேரியில் ஆளுநராக மூன்று ஆண்டுகளில் 2.99 கோடி செலவா? தமிழிசை சௌந்திரராஜன் விளக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த போது தமிழிசை சௌந்திரராஜனுக்கு மூன்று ஆண்டுகளில் 2.99 கோடி செலவுகள் ஆனதாகவும், இது ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்கள் என்று ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தியை டேக் செய்துள்ள முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதுதான் ஊடக தர்மமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுச்சேரிக்கு பொறுப்புத் துணை ஆளுநராக தமிழிசை சௌந்திரராஜன் 3 ஆண்டுகள் இருந்தார். அவர் துணை நிலை ஆளுநராக இருந்த 2021-22ம் நிதியாண்டில் 1 கோடியே 21 லட்சத்து 57 403 ரூபாய் புதுச்சேரி ஆளுநர் மாளிக்கைக்கு செலவானதாக ஆர்டிஐ தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் 2022-23ம் நிதியாண்டில் 75லட்சத்து 38 ஆயிரத்து 766 ரூபாய் செலவு ஆனதாகவும் ஆர்டிஐ தகவல்கள் வெளியாகி உள்ளது. 2023-24 நிதியாண்டில் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு 1 கோடியே 2லட்சத்து 54 ஆயிரத்து 892 ரூபாய் செலவானதாகவும் ஆர்டிஐ தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் பொறுப்புத் துணை நிலை ஆளுநராக தமிழை இருந்த 3 ஆண்டுகளில் அவருக்கு 2.99 கோடி ரூபாய் செலவாகி உள்ளதாக பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை டேக் செய்துள்ள முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் , உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதுதான் ஊடக தர்மமா? என்று கேள்வி எழுப்பி பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "தகவல் அறியும் உரிமைச் சட்ட பதிவில் முன்னாள் துணைநிலை ஆளுநர் டாக்டர்.திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஆடைக்கென்று தனியாக ஏதும் செலவு செய்யப்படவில்லை என்றும், உதவியாளராக எவரும் நியமிக்கப்படவில்லை என்றும், தனிப்பட்ட முறையிலான செலவு ஏதும் இச்செயலகத்தால் செய்யப்படவில்லை என்றும் விமான போக்குவரத்து செலவுகள் தெலுங்கானா மாநில அரசு ஏற்றுக்கொண்டது என்றும் ஆர்டிஐ பதிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையின் நிர்வாக செலவுக்கான மொத்த செலவுக்கணக்கையும்....முன்னாள் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு ஆன செலவுகள் என்று பொய்யான தகவலை மக்களுக்கு தெரிவிப்பது தான் ஊடக தர்மமா ?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications