மாமியார் வீட்டில் சாப்பிட்டுத் திரும்பிய வாலிபர்.. வெட்டிப் படுகொலை.. 6 பேர் கும்பல் வெறிச்செயல்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மாமியார் வீட்டுக்குப் போய் விட்டு சாப்பிட்டு விட்டுத் திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (36). தச்சு தொழிலாளியான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவர் நோனாங்குப்பம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

6 member gang murders a youth in Puducherry

இவருக்கு புவியரசன் என்ற மகனும், பவழச்செம்மொழி என்ற மகளும் உள்ளனர். குழந்தைகளுக்கு தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் சூர்யா தனது குழந்தைகளுடன் நோணாங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் நாகராஜ் நோணாங்குப்பத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நோணாங்குப்பம் பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே அவர் வந்த போது, 3 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நாகராஜை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டியது.

6 member gang murders a youth in Puducherry

இதில் நாகராஜ் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. நாகராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டு கதறி அழுதனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியாங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதவி செய்து கொலைக்கான காரணம் மற்றும் தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் பட்டபகலில் பைக்கில் சென்றவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+