புதுவை - கடலூர் என்.எச்-ல் தாறுமாறாக ஓடிய தனியார் பஸ்.. விபத்தில் சிக்கி 5 பேர் படுகாயம்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து ரோட்டில் சென்ற பிற வாகனங்கள் மீது விபத்து ஏற்படுத்தியதில் ஐவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
புதுச்சேரி - கடலூர் தேசிய சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துகொண்டே செல்கிறது. புதுச்சேரி அரசு சாலையை விரிவாக்கம் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இதேபோல் பேருந்து ஓட்டுனர்களும் இந்த சாலையில் அதி வேகத்துடன் பேருந்தை இயக்கி வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் அலட்சியத்தால் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார், ஒரு வேன், 4 டூ வீலர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தை ஏற்படுத்திய பேருந்தை அடித்து நொறுக்கிய பொதுமக்கள், ஓட்டுநரையும் சராமாரியாக தாக்கினர். மேலும் பேருந்து வாகனங்கள் மீது மோது சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

புதுச்சேரியிலிருந்து பாகூர் நோக்கி அதிவேகத்துடன் சென்ற தனியார் பேருந்து ஒன்று முதலியார்பேட்டை பகுதியில், முன்னாள் சென்ற ஒரு வேன் மற்றும் இரண்டு கார்கள் மீது விபத்துகுள்ளாகிவிட்டு தாறுமாறாக ஓடியது. இதனால் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு சாலையின் நாலாபுறமும் தெறித்து ஓடினர்.
ஒருகட்டத்தில் 4 இருசக்கர வாகனங்கள் மீது மோதிய பேருந்து மேற்கொண்டு நகர முடியாமல் சாலையின் நடுவே நின்றது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் உட்பட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளது. இதனிடையே விபத்து ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநரை பிடித்து சராமாரியாக தாக்கிய அப்பகுதி மக்கள், பேருந்தின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை போலீசார் பொதுமக்களிடமிருந்து பேருந்து ஓட்டுநரை மீட்டு, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications