புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொண்டை வலியுடன் வந்த சிறுவன்.. 5 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்து சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்

Google Oneindia Tamil News

புதுவை: புதுச்சேரியை அடுத்த கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொண்டை வலி என்று வந்த சிறுவனை 5 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்த மருத்துவர் சிறுவனின் வாயில் டார்ச் அடித்து மருத்துவம் பார்த்தது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    தொண்டை வலியுடன் வந்த சிறுவன்.. 5 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்து சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்

    புதுச்சேரி அடுத்த கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த நிறுவன் ஒருவனுக்கு தொண்டையில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

    அங்கு பணியில் இருந்த மருத்துவர் தான் ஒரு மருத்துவர் என்பதை சிறிது கூட நினைக்காமல் அந்த சிறுவனை மருத்துவமனை வெளியே 5 மீட்டர் தூரத்தில் நிற்க வைத்துவிட்டு மருத்துவர் மருத்துவமனை உள்ளே உட்கார்ந்துகொண்டு அந்த சிறுவனிடம் தொண்டை வலி பிரச்சனை தொடர்பாக கேட்டறிந்தார்.

    வாய்க்கரிசி போட்டுக் கொண்டுதான் திமுகவுக்கு வந்தோம்.. வைரலாகும் ஜெ.அன்பழகன் பேச்சுவாய்க்கரிசி போட்டுக் கொண்டுதான் திமுகவுக்கு வந்தோம்.. வைரலாகும் ஜெ.அன்பழகன் பேச்சு

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    பின்னர் அந்த மருத்துவர் தூரத்தில் இருந்து கொண்டு டார்ச்லைட்டை அடித்து சிறுவனின் வாயை திறக்க சொல்லி பரிசோதனை செய்தார். தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சிறிதும் சேவை மனப்பான்மையின்றி 5 மீட்டர் தூரத்தில் இருந்து இதுபோல் மருத்துவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேதனை

    வேதனை

    மேலும் என்ன பிரச்சினை என கூறாமல் என்ன மாத்திரை எழுதினார் என்று கூட சொல்லாமல் மருந்து வாங்கும் இடத்திற்கு சென்று மாத்திரை வாங்கிக்கொள் என்று கூறியது மேலும் வேதனையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    சம்பவங்கள்

    சம்பவங்கள்

    சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது மக்களுக்குத்தானே. இது போன்ற அத்தியாவசிய பணிகளை செய்வோருக்கு அல்ல. இன்று கொரோனா என தெரிந்தும் எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள் சேவை மனப்பான்மையுடன் தங்கள் உயிர், குடும்பம் ஆகியவற்றை பற்றி கவலைப்படாமல் தொண்டாற்றி சிலர் உயிர் விட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

    மருத்துவர் மீது நடவடிக்கை

    மருத்துவர் மீது நடவடிக்கை

    கொரோனா வைரஸுக்கு தொண்டை வலி மிகவும் பிரதான அறிகுறியாக சொல்லப்படுகிறது. ஆனால் இவரோ தான் ஒரு மருத்துவர் என்பதை மறந்துவிட்டு நோயாளியை அருகில் அழைத்து சென்றுகூட சிகிச்சை அளிக்காமல் இது போல் நடந்து கொண்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு கூட சிகிச்சை அளிக்காத மருத்துவர் என்ன மருத்துவர் என நெட்டிசன்கள் கோபம் கொண்டுள்ளார்கள்.

    English summary
    A Doctor in Public Health Centre near Pondicherry make a boy who suffering from throat pain, to stand in 5 meters away and checked his mouth using torch light. This video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X