திரையுலகை கட்டி ஆளும் எங்க ‘தல’.. புதுச்சேரியில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்! அதுவும் கடலுக்கடியில்!
புதுச்சேரி : நடிகர் அஜித் குமாரின் 30ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை முன்னிட்டு கடலுக்கு அடியில் பேனர் வைத்த புதுச்சேரி அஜித் ரசிகர்களின் செயல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
வேண்டாம் என்று சொன்னாலும் லட்சக்கணக்கான ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித், தமிழ் திரை உலகில் மாற்று இல்லாத இடத்தில் நாயகனாக ஜொலித்து வருபவர்.
அமராவதி படத்தில் ஆரம்பத்த நடிகர் அஜித்தின் திரைப்பயணம் வலிமை வரை தொடர்ந்து வருகிறது. இடையில் ஏராளமான தோல்விகளை பார்த்திருந்தாலும் அவரது ரசிகர் பட்டாளம் ஒரு சதவீதம் கூட குறைந்ததில்லை.

அஜித் குமார்
ஆனால் அதிகரித்தே வந்திருக்கிறது. அந்த அளவுக்கு அஜித் ரசிகர்களாக அல்ல வெறியர்களாகவே வலம் வருகிறார்கள். வலிமை படத்துடன் கிட்டத்தட்ட 60 திரைப்படங்களில் நடித்துள்ள அஜித் குமார் திரை உலகிற்கு வந்து 30 வருடங்கள் ஆகி இருக்கிறது. இதையொட்டி சமூக வலைதளங்களிலும் நலத்திட்ட உதவிகள் மூலமும் அவரது ரசிகர்கள் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றார். அன்னதானங்கள் நலத்திட்ட உதவிகள் என மாஸ் காட்டி வருகின்றனர்.

வாழ்த்துகள் குவிகிறது
திரையுலகை பொருத்தவரை நடிகைகள் நடிகர்கள் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என நடிகர் அஜித்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது தற்போது கட்சி வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் பிஸியாக இருக்கும் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் வந்து தங்கப் பதக்கங்களையும், வெண்கல பதக்கங்களையும் அள்ளி வெற்றிக்கொடி நாட்டினர். அப்போது இருந்து ரசிகர்கள் 'பீஸ்ட்' மோடில் இருக்கின்றார்.

30ஆம் ஆண்டு திரை பயணம்
இந்நிலையில் நடிகர் அஜித் அவர்களின் 30ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை முன்னிட்டு கடலுக்கு அடியில் பேனர் வைத்த புதுச்சேரி அஜித் ரசிகர்களின் செயல் சமூக வலைதளங்கில் வேகமாகப் பரவி வருகிறது. புதுச்சேரியில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நடிகர்களுக்கு பிறந்தநாளின் போது கடலில் பேனர் கட்டி பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று வருவது வழக்கமாக உள்ளது .

கடலுக்கடியில் பேனர்
அதன்படி புதுச்சேரி ப்ரெஞ்ச் சிட்டி அஜித்குமார் ரசிகர்கள் சார்பாக நடிகர் அஜித்குமாரின் 30ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை முன்னிட்டு ஸ்கூபா டைவிங் மூலம் 100அடி கடலுக்கு அடியில் பேனர் வைத்து அவரின் திரையுலக பயணத்தை பிரமாண்டமாக வரவேற்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
-
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
முகம் முழுக்க சோகம்.. தாயார் மறைவால் துபாயில் இருந்து சென்னை வந்த அஜித்குமார் -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications