ஆரோவில் உதய தினம்.. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் நெருப்பு மூட்டி கூட்டு தியானம்!
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லின் 51 வது உதய தினம் இன்று கொண்டாடப்பட்டது.
அரவிந்தர் ஆசிரம அன்னையின் பெரும் முயற்சியால் 1967ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியன்று ஆரோவில் சர்வதேச நகரம் ஆரம்பிக்கப்பட்டது.

புதுச்சேரி அருகே 10 கிலோ மீட்டர் தொலைவில் மனிதகுல ஒருமைப்பாட்டை லட்சியமாகக் கொண்டு ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது.

இந்நிலையில். ஆரோவில்லின் 51 வது உதய தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆரோவில்லில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மாத்திரி மந்திர் அருகில் அமைந்துள்ள ஆம்பி தியேட்டரில் அதிகாலை ஒன்று கூடி, தீ மூட்டி, கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.

கூட்டு தியானத்தின் போது ஆரோவில் சாசனம், அன்னையின் குரலால் ஒலிபரப்பப்பட்டது. தீப்பிழம்பின் பின்னணியில் மாத்திரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்தது அனைவரையும் பரவசப்படுத்தியது.














Click it and Unblock the Notifications