தயவு செய்தும்மா.. கடையை ஓபன் பண்ணுங்கம்மா.. சொல்லிட்டேன்.. திறந்துருவாங்க.. ஆடியோ விட்ட எம்எல்ஏ!
புதுவை: மது என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வியாதியை போக்க கொஞ்சமாக மது குடியுங்கள் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் வெளியிட்டுள்ள ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் மது என்ற மனநோயிலிருந்து மது பிரியர்களை பாதுகாக்க உடனடியாக மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் வெளியிட்டு ஆடியோ பதிவில், என்னுடைய தொகுதியில் மது கிடைக்காமல் மதுவுக்காக சானிடைசரை குடித்து இறந்து விடுகிறார்கள்.

துணைநிலை ஆளுநர்
இது தனக்கு மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் புகார் தெரிவித்தார். குடி என்பது மனநோயாக மாறிவிட்டது. ஒரு வியாதிக்கு மருந்து கொடுப்பதாக எண்ணி மதுக்கடையை திறக்க வேண்டும்.

மதுக்கடை
மதுவுக்கு அடிமையான நிறைய பேர் ஆர்.எஸ். பவுடர் போன்றவற்றை குடிப்பதாகவும், எனவே மதுக்கடையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் ஓரிரு தினங்களில் மது திறப்பு குறித்து தெரிவிப்பதாக கூறியதாக தனது ஆடியோ படிவில் பாஜக எம்எல்ஏ ஜான்குமார் குறிப்பிட்டுள்ளார்.

மனநோய்
புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மது என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட நீங்கள் குடிக்கு அடிமையாகாமல் தங்களது வியாதிக்காக மட்டும் கொஞ்சமாக குடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு
இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த கோரிக்கையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு கோரிக்கை மனுவை அவர் அனுப்பியிருந்தார். மக்களை பாதுகாக்க வேண்டிய ஒரு சட்டமன்ற உறுப்பினரே மது குடிங்கள் என்று மது பிரியர்களை ஏற்றி விடுவது போல் உள்ளது. பல்வேறு பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!











Click it and Unblock the Notifications