"குமட்டுது.. சார் அசிங்கமா பேசறாரு".. குமுறிய கல்லூரி மாணவி.. விஸ்வரூபமெடுக்கும் புதுக்கோட்டை மேட்டர்

அரசு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் மீது நடவடிக்கை பாய்கிறது

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: மாணவியை உல்லாசத்துக்கு அழைத்த புதுக்கோட்டை பேராசிரியர் விவகாரத்தில், இன்றைய தினம் பேராசிரியர்கள் குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி மாணவிகள் பல இடங்களில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவது அதிகமாகிவிட்டது.. நடந்து வரும் சம்பவங்கள் எல்லாம் மிகவும் வேதனை அளிப்பதாக கல்வி அதிகாரிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்..

ஆசிரியர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இவர்களை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர்களே பாலியல் அத்துமீறல்களில் நடந்து கொள்வது அதிர்ச்சியை தந்து வருகிறது.

 உருட்டுக்கட்டை

உருட்டுக்கட்டை

கர்நாடகத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பும், ஒரு தலைமை ஆசிரியரை, அந்த பள்ளியின் மாணவிகளே, "உருட்டுக்கட்டை" பாடம் நடத்தியிருக்கிறார்கள்.. நடுராத்திரி தண்ணி அடித்துவிட்டு, தூங்கி கொண்டிருந்த ஹாஸ்டல் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த நிலையில், கொந்தளித்து விட்டார்கள் பள்ளி மாணவிகள்.. அதேபோல, ஆந்திராவில் பள்ளியிலேயே ஒரு டீச்சரிடம் உல்லாசமாக இருந்துள்ளார் அந்த தலைமை ஆசிரியர்.. இதை அந்த பள்ளி மாணவர்களே வீடியோ எடுத்து வெளியிட்டுவிட்டனர். இது தொடர்பாக அந்த தலைமை ஆசிரியர் நேற்று முன்தினம் கைதாகிய சம்பவமும் நடந்தது..

கெஞ்சல்

கெஞ்சல்

நம் தமிழகமும் இதற்கெல்லாம் விதிவிலக்கில்லை.. நாகை நர்சிங் காலேஜில் உடற்கூறுவியல் ஆசிரியராக பணிபுரியும் சதீஷ், மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை தந்திருந்தார். "நான் நாளைக்கு காலேஜ் வருகிறேன் சார், இன்று மாதவிலக்கு, வலி அதிகமாக இருக்கிறது, வீட்டிற்கு வர முடியாது" என்று அந்த மாணவி கெஞ்சியும்கூட, சதீஷ் விடாமல் தொல்லை தந்த ஆடியோவும் வெளியாகி இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், புதுக்கோட்டையில் இன்னொரு சம்பவம் வெளிவந்துள்ளது.. இங்கு ஒரு அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது..

 ஆடியோ லீக்

ஆடியோ லீக்

பிபிஏ முதலாம் ஆண்டு மாணவி ஒருவர், அதே கல்லூரியில் மற்றொரு துறையில் பயின்று வரும் மாணவர் ஒருவரை காதலித்து வருகிறார்.. ஆனால், இந்த மாணவி மீது அந்த கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவருக்கு கண் இருந்து வந்துள்ளது.. மாணவியின் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு, அடிக்கடி அவருக்கு தொடர்பு கொண்டு வந்துள்ளார். நாளுக்கு நாள் ஆபாச பேச்சும் பேராசிரியரிடம் அதிகரித்துள்ளதுடன், தவறான உறவுக்கும் மாணவியை அழைத்துள்ளார்.. இதனால் அதிர்ந்து போன மாணவி என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துள்ளார்.. பாதிக்கப்பட்ட மாணவி, தன்னுடைய சக தோழியிடம் செல்போனில் பேசிய ஆடியோவும் இணையத்தில் வைரலானது..

உடலுறவு

உடலுறவு

மாணவி: "எல்லோருக்கும் உடலுறவில் ஆசை இருக்கும்... எனக்கும் ஆசை இருக்கு.. நீ என்னை எவ்ளோ வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கோ.. ஆனால், என்னை விட அவன்கிட்ட (காதலன் பெயரை சொல்கிறார்) என்ன இருக்கு? அவன் காசு தரேன்னானா? புள்ளய குடுத்துட்டு ஏமாத்திருவான்.. நான் உனக்கு எல்லாமே பண்ணுவேன்னு" என்கிட்ட சொல்றாருடி.

தோழி: என்னா பண்ணுவானா?

மாணவி: கேவலமாக பாக்கிறாரு... கேவலமா பேசுறாரு... சுருதிக்கிட்ட பேசும்போது (இன்னொரு மாணவி) கழுத்துக்கு கீழே தான் பாத்து பேசினாரு" என்று அந்த ஆடியோ நீண்டது.

உல்லாசம்

உல்லாசம்

இது தொடர்பான விசாரணை சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் நடந்து வருகிறது என்றாலும், அவரை பற்றின பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.. அந்த கல்லூரியில் சில மாணவிகளுக்கு இதுபோலவே அந்த பேராசிரியர் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார்.. அவர்கள் எல்லாம் பயந்து கொண்டு பேசாமல் இருந்து வந்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட மாணவி சற்று துணிச்சலானவராம்.. மாணவியை உல்லாசத்துக்கு அவர் அழைத்தபோதே, தன்னுடைய எதிர்காலம் குறித்து பயம் மாணவிக்கு வந்துவிட்டதாம்.

 நொறுங்கிய பைக்

நொறுங்கிய பைக்

அதனால், அந்த பேராசிரியரிடம் "இதுபோல் என்னிடம் பேசாதீங்க" என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.. ஆனாலும் பேராசிரியர் தன்னை திருத்திக்கொள்ளவில்லை.. நாளுக்கு நாள் பேராசிரியரின் செல்போன் பேச்சால் கடும் விரக்தியடைந்த மாணவி, அதற்கு பிறகுதான் தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்... இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர்களுடன் நேராக காலேஜுக்கு சென்றுள்ளனர்.. ஆனால், அவர்கள் வருவதை அறிந்த பேராசிரியர், அங்கிருந்து அவசர அவசரமாக பின்பக்கமாக வெளியேறி விட்டாராம்..

 வலிய வான்டட்

வலிய வான்டட்

அதனால்தான், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது பைக்கை, உறவினர்கள் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். தகவலறிந்து வந்த கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதுடன், பேராசிரியர் மீது புகார் தருகிறோம் என்று உறுதியளித்தனர்.. இருந்தாலும், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த இந்திய மாணவர் சங்கத்தினர், தாங்களாகவே இந்த விஷயத்தை கையில் எடுத்தனர்.. பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோர்களையும் தாண்டி, இவர்களாகவே, கணேஷ் நகர் போலீசிலும் புகாரை தந்தனர்..

ஆக்‌ஷன்

ஆக்‌ஷன்

அப்போதுதான், பேராசிரியர், இதுபோலவே பல மாணவிகளிடம் அத்துமீறியும், அநாகரீகமாகவும் பேசியது தெரியவந்தது. ஒருபக்கம் போலீசார் விசாரணையில் இறங்கினர்.. மற்றொருபக்கம், பேராசிரியர்கள் அடங்கிய குழுவினரும் விசாரணையில் இறங்கினர்.. அநேகமாக இன்றைய தினம், இதுகுறித்த விசாரணை அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிகிறது. ஒட்டுமொத்த பெற்றோர்களும் கொந்தளிப்பில் உள்ள நிலையில், புதுக்கோட்டை பேராசிரியர் விஷயத்தில் என்ன நடவடிக்க எடுக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கக்கூடிய ஆசிரியர்களே, இந்த லட்சணத்தில் இருந்தால், பிள்ளைகளை யார்தான் வழிநடத்துவது???

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+