புதுவை க்ளைமாக்ஸ் ஓவர்... சபாநாயகர் பிளஸ் 2 அமைச்சர்கள் பதவி.. பாஜக நெருக்கடிக்கு பணிந்தார் ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் நீடித்து வந்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன. பாஜகவின் நெருக்கடியை ஏற்று அக்கட்சிக்கு சபாநாயகர் பதவி மற்றும் 2 அமைச்சர்கள் பதவி வழங்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொண்டுள்ளார் என்கின்றன தகவல்கள். இதனையடுத்து வரும் 10-ந் தேதி புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பதவியேற்க கூடும் என கூறப்படுகிறது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. கடந்த மாதம் 7-ந் தேதியே முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்றார்.

துணை முதல்வர் கேட்ட பாஜக
இதன்பின்னர் சில நாட்களிலேயே ரங்கசாமிக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் புதுச்சேரியில் துணை முதல்வர் மற்றும் 3 அமைச்சர்கள் பதவியை பாஜக கேட்டது. இதனை என்.ஆர். காங்கிரஸ் ஏற்க மறுத்தது.

என்.ஆர்.காங்- பாஜக பேச்சு முறிவு
இதையடுத்து சபாநாயகர் பதவி மற்றும் 2 அமைச்சர் பதவியை பாஜக கேட்டது. 2 அமைச்சர்கள் பதவி மட்டும்தான் தருவோம்; சபாநாயகர் பதவி எங்களுக்குதான் எனவும் என்.ஆர். காங்கிரஸ் அடம்பிடித்தது. இதனால் என்.ஆர். காங்கிரஸுடனான பேச்சுவார்த்தைகளை பாஜக நிறுத்த உத்தரவிட்டிருந்தது.

ரங்கசாமி திடீர் ஒப்புதல்
என்.ஆர். காங்கிரஸ்- பாஜக இடையேயான இந்த மோதலால் புதுச்சேரியில் புதிய அமைச்சரவை பங்கேற்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில் பாஜகவின் நெருக்கடிக்கு பணிந்து சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவியை தருவதற்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூன் 10-ல் அமைச்சரவை பதவியேற்பு?
இதனால் புதுச்சேரியில் நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வர உள்ளது. மேலும் வரும் 10-ந் தேதி புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவை பதவியேற்க உள்ளது. இருப்பினும் சபாநாயகர் பதவி, பாஜகவுக்கு போவதால் ரங்கசாமி அரசுக்கு தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications