புதுவை துணை நிலை ஆளுநராக கே கைலாஷநாதன் நியமனம்.. மோடிக்கு மிக நெருக்கம்! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

புதுவை: பல்வேறு மாநில ஆளுநர்களை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கே கைலாசநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான அதிகாரியான கே கைலாஷநாதன் புதுவை துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு தெலுங்கானா - புதுவை துணை நிலை ஆளுநர் பொறுப்புகள் கூடுதலாக வழங்கப்பட்டு இருந்தது.

former-gujarat-chief-secretary-k-kailashanathan-appointed-lieutenant-governor-of-puducherry

இதனால், லோக்சபா தேர்தலுக்கு பிறகு பொறுப்பு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்போது தெலுங்கானா மற்றும் புதுவைக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இரண்டு மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநில ஆளுநராக முன்னாள் திரிபுரா முதல்வர் திஷ்ணு தேவ் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளர். புதுவை துணை நிலை ஆளுநராக கே கைலாஷநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே கைலாசநாதன் குஜராத்தின் முன்னாள் தலைமை செயலாளராக இருந்தவர். பிரதமர் மொடிக்கு மிகவும் நெருக்கமானவாக இவர் அறியப்படுகிறார். கேரளாவை சேர்ந்த இவர் தமிழகத்தின் ஊட்டியில் வளர்ந்தவர்.

இவரது தந்தை தபால் துறையில் பணியாற்றியவர். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த இவர் 1979 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். குஜராத்தின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த இவர் 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். எனினும், தலைமை முதன்மை செயலாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்ட மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.

கடந்த ஜூன் 30 ஆம் தேதியில் தான் இந்த பொறுப்பில் இருந்து கே கைலஷ் நாதன் ஒய்வு பெற்ற நிலையில், தற்போது புதுவை துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுவையை பொறுத்தவரை யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் உள்ளன. இதனால், புதுவையில் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படும் கே கைலாஷநாதன் நியமனம் செய்யப்பட்டு இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+