புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் காலமானார்
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச முன்னாள் முதல்வரும், திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ஆர்.வீ.ஜானகிராமன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
இவர் 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி மாநிலத்தில் திமுக அமைச்சரவையில் முதல்வராக பணியாற்றியுள்ளார். மேலும் 1985 ஆம் ஆண்டு நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தேர்வானவர்.

தொடர்ந்து இதே தொகுதியில் இருந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வான ஜானகிராமன், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

78 வயதான ஆர்.வி.ஜானகிராமன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


ஜானகிராமனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை முதல் நாளை காலை 7 மணி வரை வைக்கப்படுகிறது. இதனையடுத்து அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூரில் நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்த திமுக எம்பி கனிமொழி, ஆர்.வி.ஜானகிராமனை அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு வந்து பார்த்து உடல் நலம் விசாரித்து விட்டுச் சென்றார் என்பது நினைவிருக்கலாம். ஆர்.வி.ஜானகிராமன் மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி












Click it and Unblock the Notifications