சர்க்கரை அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்..ரேஷன் கார்டுகளில் மாற்றம் வருதா? லட்டு நியூஸ் யாருக்குபாருங்க
புதுச்சேரி: ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தர புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது. அத்துடன் குடிமைப் பொருள் வழங்கல் துறையின் சேவைகளும் உடனுக்குடன் கிடைக்க வழிவகை செய்ய போவதாகவும் தெரிகிறது. இதுகுறித்த தகவல்கள்தான் இணையத்தில் பரவி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை 1,67,353 மஞ்சள் ரேஷன் கார்டுகள், 1,86,397 சிவப்பு ரேஷன் கார்டுகள் என மொத்தம் 3,50,750 ரேஷன்கார்டுகள் உள்ளன.

அந்தவகையில், புதுச்சேரியில் ஆதி திராவிட, பழங்குடியின மக்களுக்கான நிதியுதவி கடந்த வருடம் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டிருந்தது..
ரேஷன்கடைகள்: வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் என்றாலே, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்குவது வழக்கம்.. ஆனால், இந்த நடைமுறையை முதல்வர் ரங்கசாமி மாற்றியிருந்தார்.
வேட்டி, சேலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.500, வரும் தீபாவளி முதல் ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டு அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்" என்று அறிவிப்பும் வெளியிட்டிருந்தார். ஏற்கனவே, சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் இலவச துணிக்கு பதிலாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகைக்கு 500 ரூபாய் பணமும் வழங்கப்படுவது, அம்மாநில மக்களை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியது..
குற்றச்சாட்டுகள்: எனினும் ஒருசில குற்றச்சாட்டுகள், குடிமைப்பொருள் வழங்கல் துறையில் நிலவியவாறே உள்ளது.. குறிப்பாக, சிவப்பு ரேஷன்கார்டுகளை தகுதியில்லாதவர்கள், பணக்காரர்கள் வைத்துள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகிறது.. இந்த புகார்களை களைவதற்காகவே, சிவப்பு ரேஷன்கார்டுகளை A, B, C, D என்று 4 வகையாக பிரிக்கப்பட உள்ளதாகவும், இதில், வறுமையில் குடிசையில் வீடுகளில் இருப்பவர்கள், A பிரிவில் இடம் பெற போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதேபோல, ரேஷன் கார்டில் ஏதாவது திருத்தம், பெயர் சேர்ப்பு, உள்ளிட்ட தேவைகளுக்கு உடனடி சேவைகள் கிடைப்பதில்லை. இதற்காக விண்ணப்பித்துவிட்டு, மாதக்கணக்கில் காக்க வேண்டியிருக்கிறது.. அதனால்தான், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்பட 5 முக்கிய ரேஷன்கார்டு சேவைகளை விண்ணப்பித்த உடனேயே தந்துவிட பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.
துரித பணிகள்: ஏற்கனவே போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையில், 30 தொகுதிகளில் ரேஷன் கார்டு சேவைகளை துரிதப்படுத்த 100 இளைஞர்கள் களமிறங்க போகிறார்களாம். அதேபோல, ரேஷன்கார்டுகளில் பெரும்பாலும் குடும்ப தலைவர்களின் போட்டோ இடம் பெற்றுவரும்நிலையில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரது போட்டோவையும் பதிவிடலாமா? என்ற யோசனை நடந்து வருகிறதாம்.
முக்கியமாக, கடந்த காலங்களில் புத்தக வடிவில் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டதைபோலவே, மீண்டும் புத்தக வடிவில் ரேஷன்கார்டுகளை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த அதிரடி: மொத்தத்தில், புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமுருகன் உத்தரவின்பேரில் குடிமை பொருள் வழங்கல் துறை சேவைகளை எளிமைப்படுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளதால், ரேஷன்கார்டுகள் அனைவருக்கும் விரைவில் கிடைக்கும் என்பதுடன், ரேஷன் தொடர்பான சேவைகளும் உடனுக்குடன் மக்களுக்கு போய்ச்சேரும் என்றும் நம்பப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications