புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆளுநராக அரசியலைமைப்பின்படி அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றினேன்... அனைவருக்கும் நன்றி - கிரண் பேடி!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றியதாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி கூறியுள்ளார்.

புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது புதுச்சேரி மக்களின் கையில்தான் உள்ளது என்றும் கிரண் பேடி கூறினார்.

துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா பரிசோதனை குறைவாக உள்ளது: பயோகான் கிரண் மஜூம்தார் ஷா இந்தியாவில் கொரோனா பரிசோதனை குறைவாக உள்ளது: பயோகான் கிரண் மஜூம்தார் ஷா

பாம்பும், கீரியுமாக நாராயணசாமி-கிரண்பேடி

பாம்பும், கீரியுமாக நாராயணசாமி-கிரண்பேடி

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், மாநில முதல்வர் நாராயணசாமியும் பாம்பும், கீரியுமாக செயல்பட்டு வந்தனர். புதுச்சேரி அரசு அறிவிக்கும் திட்டங்களை கிரண்பேடி தொடர்ந்து எதிர்த்து வந்தார். கடைசி வரை அரசுக்கும், ஆளுநருக்கும் ஒத்து போகவில்லை.கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

கிரண்பேடி அதிரடி நீக்கம்

கிரண்பேடி அதிரடி நீக்கம்

நாராயணசாமியும் கிரண்பேடியை திரும்ப பெறக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாராயணசாமி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து கவர்னர் கிரண்பெடியை திரும்ப பெறக்கோரி மனு அளித்தார். இதற்கிடையே நேற்று இரவு திடீர் என புதுச்சேரி ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டார். புதுச்சேரி ஆளுராக தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசுக்கு நன்றி

மத்திய அரசுக்கு நன்றி

இந்த நிலையில் புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றியதாக பதவியில் இருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி கூறியுள்ளார். இது தொடர்பாக கிரண் பேடி டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- எனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

புதுச்சேரி மக்களின் கையில்தான் உள்ளது

புதுச்சேரி மக்களின் கையில்தான் உள்ளது

புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் பணியாற்றினேன் . புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது புதுச்சேரி மக்களின் கையில்தான் உள்ளது. புதுச்சேரி மக்களுக்கும், அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றி. வளமான புதுச்சேரி என்று கிரண் பேடி டுவிட்டரில் கூறியுள்ளார்.

English summary
Kiran Bedi, who has been removed from office as the Deputy Governor of Pondicherry, has said that she has served in an impeccable manner in accordance with the Constitution
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X