புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருக்காஞ்சி கிராமத்தில் கலகலப்பு.. பாட்டி போட்ட குத்தாட்டம்.. சிரித்து ரசித்த கிரண் பேடி

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் திருக்காஞ்சி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கலந்து கொண்டார். அப்போது ஒரு பாட்டி அவர் முன்பு கிராமிய பாடலைப் பாடி டான்ஸும் ஆடியதால் கிரண் பேடி அதை சிரித்து ரசித்தார்.

kiranbedi inspection

புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த இரண்டரை வருடங்களாக வார இறுதி நாட்களில் நகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு சென்று தூய்மைப் பயணிகளை மேற்கொள்வது, நீர்நிலைகளை தூர்வாருவது மற்றும் மழை நீர் சேகரிப்பின் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறார்.

kiranbedi inspection

இந்நிலையில் புதுச்சேரி அருகே உள்ள திருக்காஞ்சி கிராமத்திற்கு இன்று கிரண்பேடி ஆய்வுக்கு சென்றார். கிரண்பேடி வருவதை அறிந்த கிராமத்து பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி கிரண்பேடியை ஆரத்தி எடுத்து உற்ச்சாகமாக வரவேற்றனர். சுய உதவி குழுக்களை சேர்ந்த மகளிர் வங்கி கடன் பெற்று தாங்கள் உற்பத்தி செய்த கலைபொருட்களை காட்சி வைத்திருந்தனர். இதனை கிரண்பேடி பார்வையிட்டார்.

kiranbedi inspection

பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கிரண்பேடி புதுச்சேரியின் தேவதை என்றும், அவர் புதுச்சேரி மக்களுக்களின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு கொண்டிருக்கிறார் என புகழ்ந்து தள்ளினர் கிராம மக்கள். அப்போது மேடையில் அமர்ந்திருந்த கிரண்பேடி முன்பு கிராமத்து பாட்டி ஒருவர் கிராமிய பாடலை பாடியவாறு குத்தாட்டம் போட, இதை பார்த்த கிரண்பேடி மகிழ்ச்சியில் மேடையிலிருந்து எழுந்து குத்தாட்டம் போட்ட பாட்டிக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

kiranbedi inspection

மேலும் நிகழ்ச்சியில் கிரண்பேடி பேசுகையில், யாரையும் சாராமல் சுயல் தொழில் செய்து வாழ்க்கையை நடத்தி வரும் மகளிருக்கு வாழ்த்துகள் என்றும், சமுதாயத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார்.

English summary
Puducherry Lt Governor Kiran Bedi visited a village and interacted with villagers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X