அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு அடுத்த அறிவிப்பு.. அமலுக்கு வரும் புதிய நடைமுறை.. இனிமே இப்படித்தான்
புதுச்சேரி: அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்த அறிவிப்பையும் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.
4 நாட்களுக்கு முன்பு, என்எம்சி எனப்படும் தேசிய மருத்துவ கவுன்சில் புது அதிரடி ஒன்றை பிறப்பித்திருந்தது.. அதன்படி, நோயாளிகளின் விவரங்கள் அடங்கிய மருத்துவப் பதிவேட்டை அனைவரும் பராமரிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இமெயில் முகவரி: அத்துடன், மருத்துவ கல்லூரிகளில் ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் வருகைப் பதிவு, மருத்துவ பதிவேடு மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் நடவடிக்கைகளில் சந்தேகங்கள், உதவிகளுக்கு பிரத்யேக இமெயில் முகவரிகளையும் ஆணையம் வெளியிட்டிருந்தது.
ஆதார் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும், மருத்துவப் பதிவேடு நடைமுறைகளுக்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும், சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு [email protected] என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது.
அரசு ஊழியர்களுக்கு: இந்நிலையில், புதுச்சேரி அரசு, மொத்த அரசு ஊழியர்களுக்கும் சேர்த்து ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.. வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை கட்டாயப்படுத்த தலைமை செயலாளர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
புதிய உத்தரவு: புதுச்சேரி அரசு துறைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு அதிகமாக ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர் வேலையில் மெத்தனமாக இருக்கிறார்கள்.. சிலர் வேலை நேரத்தில் ஆபீசிலேயே இருப்பதில்லையாம்.. சிலர், தங்களது உயர் அதிகாரிகன் உத்தரவுகளை நிறைவேற்றுவதில்லையாம். அதுமட்டுமல்ல, அரசு ஊழியர்கள் காலையில் 8.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை வேலையில் இருக்க வேண்டும்.
ஆனால் ஊழியர்கள் உரிய நேரத்திற்கு ஆபீசுக்கு வவருவதில்லையாம்... இப்படியெல்லாம் தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்துவந்தநிலையில், இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி உத்தரவு ஒன்று போடப்பட்டுள்ளது.
நடைமுறைகள்: இதுகுறித்து தலைமை செயலர் ராஜிவ் வர்மா வெளியிட்டுள்ள உத்தரவில் உள்ளதாவது: "அனைத்து அரசு அலுவலகங்களிலும் 6 மாதத்திற்குள் லஞ்சத்துக்கு எதிரான மேலாண்மை நடைமுறைகளை அமல்படுத்த வேண்டும். அதன்படி அரசு அலுவலகங்களில் ஜனவரி 1-ந் தேதிக்குள் பயோ மெட்ரிக் வருகை பதிவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
கவர்னரிடம் வரும் புகார்கள், குறைதீர்க்கும் நாளில் பெறப்படும் புகார்களுக்கு 30 நாட்களில தீர்வு காண வேண்டும். 2 மாதத்திற்குள் அனைத்து புகார்களும் நேர்மையான முறையில் தீர்க்கப்பட வேண்டும். டிஜிட்டல் முறையில் அனைத்து பணிகளையும் கண்காணிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை வாரம் ஒருமுறை ஆய்வு செய்து அகற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிரும் ஊழியர்கள்: புகார்களை சரி செய்ய நிர்வாக சீர்திருத்தத்துறை அரசு ஊழியர்களின் வருகையை கண்காணிக்க தனிப்படை அமைத்தது, ஆனால் அதில் பலனில்லை, அதனால்தான், இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசின் இந்த உத்தரவுகள், அரசு ஊழியர்களை அதிர செய்து வருகிறதாம்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications