‘ஏய் தம்பி உனக்கு என்ன பிரச்சனை’.. மெட்ரோ திட்டம் கேள்வியால் செய்தியாளரிடம் சீறிய சீமான்
புதுச்சேரி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில மாதங்களே உள்ளது. இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. எஸ்ஐஆர் சர்ச்சை, மெட்ரோ ரயில் திட்டம் மறுப்பு ஆகியவை தமிழ்நாடு அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் சீமான் கோபத்துடன் பதில் சொல்லியதுடன் செய்தியாளரை ஒருமையில் விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எஸ்.ஐ.ஆர் பணிகளுக்காக அலுவலர்களை நியமனம் செய்தது யார். பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுக அதை எதிர்க்க முடியாது. எஸ்ஐஆர் பணிக்காக அதிகாரிகளை நியமனம் செய்துவிட்டு, திமுக கவுன்சிலர்கள் ஏன் உடன் செல்கிறார்கள்.

எஸ்ஐஆர் சர்ச்சை
பீகாரில் உங்களுக்கு எதிராக இருந்த 81 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டனர். வாக்குக்கு ரூ.10,000 கொடுத்துதான் பீகாரில் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையம் அரசை நடத்துகிறதா அல்லது அரசு தேர்தல் ஆணையத்தை நடத்துகிறதா. இதைப்பற்றி ஸ்டாலின் தான் கேட்க வேண்டும். அவர்கள் இதை எதிர்ப்பதாக நாடகம் ஆடுகிறார்கள். கொளத்தூரில் போலி வாக்குகள் பதிவாகியிருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.
இதை இப்போதுதான் கண்டறிந்துள்ளார்களா. இதற்காக கொளத்தூரில் ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என்று கூறுவார்களா. தமிழ்நாடு மதுபானத்தை அங்கீகரித்த மாநிலமாகிவிட்டது. அரசாங்கமே அதை நம்பித்தான் இருக்கிறார்கள். விஷத்தை விற்று நல்லது செய்வதை ஏற்க முடியாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் என்று கூறியுள்ளோம். புதுச்சேரி சுற்றுலா பகுதி என்பதால் அதை உடனே செய்ய முடியாது.
மெட்ரோ தேவையில்லை
கொஞ்சம் கொஞ்சமாக தான் செய்ய முடியும். அவரவர் நிலம் அவரவர் உரிமை என்றால் நாடு எப்படி ஒருமைப்பாடுடன் இருக்கும். எங்கள் நிலத்தில் அணு உலை வைத்து பிற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கப்படுகிறது. இங்கு பிரச்சனை என்றால் பாதிப்பு எங்களுக்கு தான். காங்கிரஸ், பாஜக தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசுவார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் கர்நாடகா மாநில கட்சியாக மாறிவிடுகிறார்கள்.
இங்குள்ள காங்கிரஸ், பாஜக அப்படியிருப்பதில்லை. மேகதாது அணைக் கட்டும் கர்நாடகா காங்கிரஸ்க்கு ஆதரவாக ஓட்டு கேட்ட ஸ்டாலின் ஐயாவிடம் அதைப்பற்றி கேள்வி எழுப்புங்கள். வயிறு நிறைய பசி வைத்துக் கொண்டு வானூர்தியில் போவதும், மெட்ரோ ரயில் வருவதும் தான் வளர்ச்சியா. மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லாதது.
சீமான் டென்ஷன்
முதலில் இருப்பதை சரி செய்யுங்கள். துறைமுகங்கள், விமான நிலையங்களில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யுங்கள். சாலை முழுவதும் சவக்குழியாக உள்ளது. கொஞ்சம் மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் போகிறது. அப்போது மெட்ரோ ரயிலுக்குள் ஏறி படுத்துக் கொள்வதா. ஏற்கனவே சென்னையில் ஓடும் ரயில்களில் என்ன பிரச்சனை இருக்கிறது.
விமான நிலையம் கட்டி அதில் பறக்கும் விமானங்கள் அரசுடையதா, தனியார் முதலாளிகளுடையதா. மெட்ரோ ரயில் திட்டம் இந்தியாவுடையதா. உலக வங்கியுனுடையதா. எங்கள் ஆட்சியில் அதற்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டோம்." என்று கோபமாக விமர்சித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
ஒருமையில் விமர்சனம்
"உனக்கு என்ன தம்பி பிரச்சனை. காமெடி பண்ணிட்டு அலையாதே. உனக்கு மெட்ரோ வேண்டும் என்றால் போராடு." என்று கூறியதுடன் கேள்வி எழுப்பிய செய்தியாளரை 'பைத்தியக்காரன்' என்று சொல்லி ஒருமையில் விமர்சித்தார். சீமான் ஒருமையில் பேசியதற்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications