கருப்பழகி பிரிவில் உலகழகி சான் ரேச்சல் திடீர் தற்கொலை! புதுச்சேரியில் சோகம்
புதுவை: புதுச்சேரியை சேர்ந்த உலகழகி பட்டம் வென்ற சான் ரேச்சல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
கருப்பழகி பிரிவில் உலகழகி பட்டம் பெற்றவர்தான் சான் ரேச்சல். இவர் பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

25 வயதான சான் ரேச்சல் புதுச்சேரியைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே புற்றுநோய் காரணமாக தனது தாயை இழந்தார். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர்.
ஆரம்பத்தில் தனது கருமை நிறத்தால் கேலி செய்யப்பட்டாலும், அதை ஒரு சவாலாக ஏற்று மாடலிங் துறையில் நுழைந்தார். தற்போது பலருக்கும் மாடலிங் பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறார்.
மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதே இவரது லட்சியமாக உள்ளது. தனது தன்னம்பிக்கையினாலும், போராட்ட குணத்தினாலும் பலரது ஃபேவரைட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளார்.
கருப்பு நிறம் என பலர் அவரை ஒதுக்கிய நிலையில் விடா முயற்சியால் மிஸ் பாண்டிச்சேரி 2020-2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 என பல டைட்டில்களை ஜெயித்து தற்போது மாடலிங்கில் கலக்கி வரும் இவர், மிஸ் பாண்டிச்சேரி'தான் தன் மனதுக்கு எப்போதும் நெருக்கமானது என பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
சிறிய வயதிலிருந்தே தன்னை சுற்றியிருக்கும் பலரால் தன் நிறத்தின் காரணமாக பல்வேறு சங்கடங்களை எதிர் கொண்டிருந்தார் சான் ரேச்சல். மிஸ் புதுவை 2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 உள்ளிட்ட பல்வேறு அழகு போட்டியில் பல்வேறு விருதுகளைப் பெற்றார். புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு மாடலிங் பயிற்சி வகுப்புகள் எடுத்த சான் ரேச்சல், மிஸ் இந்தியாவில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டார். பலரது பேவரைட் லிஸ்டில் சான் ரேச்சல் இடம்பெற்றிருந்தார். அவரது இறப்புக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications