தரம் தாழ்ந்து விட்டார் பிரேமலதா விஜயகாந்த்... நாராயணசாமி ஆவேசம்
Recommended Video

புதுச்சேரி: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பிரேமலதாவை கடுமையாக சாடியுள்ளார்.
கூட்டணி பேரம் படியாததால் திமுகவைப் பற்றி பிரேமலதா தவறாக பேசி வருவதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி வைஷாலி வீதியில் புதுப்பிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது...
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ச்சியாக திமுகவை பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் தரக்குறைவான விமர்சனம் செய்து வருகிறார். து அவருடைய அரசியலுக்கு ஏற்றதல்ல.

தேமுதிக திமுகவுடனும், அதிமுகவுடன் கூட்டணி பேரம் பேசினார்கள். ஆனால் அந்த பேரம் எடுபடவில்லை. திமுகவின் கதவு மூடப்பட்டுவிட்டது என ஸ்டாலின் சொல்லிவிட்டார். அதன்பிறகு தேமுதிகவினர் அதிமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் பிரேமலதா தனிப்பட்ட முறையில் எந்தவொரு அரசியல் கட்சி தலைவர்களையும் விமர்சனம் செய்வதை ஏற்றுகொள்ள முடியாது. கொள்கை ரீதியாக விமர்சனம் செய்யலாம். இதிலிருந்து பிரேமலதா ஒரு தரம் தாழ்ந்த அரசியல்வாதி என்பது தெரிகிறது. தேமுதிக மக்கள் மத்தியில் செல்லும்போது மக்கள் கண்டிப்பாக அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த ரங்கசாமி, தேர்தலில் வெற்றி பெற்ற பின் ஜெயலலிதாவை திரும்பி பார்க்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஜெயலலிதா, ரங்கசாமி தன்னை முதுகில் குத்துவிட்டார் அதனால் ரங்கசாமிக்கு போடுகிற ஓட்டு செல்லாத ஓட்டு என ஜெயலலிதா பகிரங்கமாக விமர்சனம் செய்திருந்த நிலையில், அதிமுகவுடன் ரங்கசாமி தற்போது வைத்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.

ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்களுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளீர்கள் என அதிமுகவினர் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர் நாராயணசாமி, பாஜகவுடன் ரங்கசாமி கூட்டணி வைத்துள்ளதிலிருந்தே ரங்கசாமி சொந்த காலில் நிற்க தெரியாதவர் என ரங்கசாமியை முதலமைச்சர் நாராயணசாமி சாடினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications