புதிய மதுபான ஆலைகள்.. புதுச்சேரி சாராய கடலாக மாறிவிடும்.. நாராயணசாமி எச்சரிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக மதுபான ஆலைகள் தொடங்கினால், மாநிலம் சாராய கடலாக மாறிவிடும் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி என்றால் அனைவருக்கும் நினைவு வருவது ஜிப்மரும், மதுபானமும் தான். அந்த அளவுக்கு புதுச்சேரியில் திரும்பிய பக்கமெல்லாம் மதுபான கடைகள் நிரம்பி இருக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மாநிலத்தின் முக்கிய வருவாயாகவும் மது விற்பனை இருக்கிறது. இந்த சூழலில், புதுச்சேரியில் புதிய மதுபான ஆலைகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கூட்டம்
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், மக்களின் அன்றாட தேவையான அரிசி, கோதுமை, மைதா ஆகியவற்றுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி விதித்துள்ளனர். இதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலத்திலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஏற்கப்பட்டே வரி அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சிலில் பாஜகவே மெஜாரிட்டி உறுப்பினர்களாக இருப்பதால் மட்டுமே வரி விதிப்புக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

முதலமைச்சர் யார்?
ஏனாமில் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். முதல்வர் ரங்கசாமி நேரில் செல்லவில்லை. ஏனாம் தொகுதியில் போட்டியிட்ட ரங்கசாமி தேர்தலில் தோல்வியடைந்ததால் அந்த மக்களை பழிவாங்கும் எண்ணத்தோடு, நேரில் கூட பார்க்க செல்லாமல் தவிர்க்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. அதேநேரத்தில் புதுச்சேரி முதலமைச்சராக செயல்படும் ஆளுநர் தமிழிசை ஏனாம் சென்று நிவாரணங்களை அறிவித்துள்ளார். புதுச்சேரியில்தான் ஏராளமான முதல்வர்கள் இருக்கிறார்கள்.

புதிய மது ஆலை
புதுச்சேரியில் ஏற்கனவே 5 மதுபான ஆலைகள் இயங்குகின்றன. இந்த நிலையில் புதிய மதுபான ஆலைகள் அமைக்க அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு பலர் மனு செய்திருந்தாலும், தமிழகத்தில் மதுபான ஆலைகளை நடத்துபவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளன. இதற்காக ரூ.15 கோடி பேரம் பேசி கைமாறியுள்ளது. ஏற்கெனவே புதுச்சேரியில் சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மதுபான ஆலைகள் தொடங்கினால் புதுவை சாராய கடலாக மாறிவிடும். இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும்.

குற்றங்கள் அதிகரிக்கும்
ஏற்கனவே புதுச்சேரியில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், மதுபான ஆலைகள், மதுக்கடைகளுக்கு கூடுதலாக அனுமதி அளித்தால் குற்ற செயல்கள் மேலும் பெருகும். அண்மைக் காலமாக புதுவையில் தொடர்ந்து குண்டு வெடிக்கிறது. லாஸ்பேட்டையில் எம்எல்ஏ வீட்டின் அருகேயே குண்டு வீசப்பட்டுள்ளது. காவல்துறை, உளவுத்துறை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. ரவுடிகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆட்சியாளர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications