பழிக்குப் பழி..புதுச்சேரி ரவுடி கொடூர கொலை.. 9 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில் நண்பரை கொலை செய்த ரவுடியை, பழிக்குப் பழியாக நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்த 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள், மற்றும் செல்போஃன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தை சேர்ந்த ரவுடி பன்னீர்செல்வம் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துகொண்டு இருந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குள் புகுந்தது.

கொலை வெறி கும்பலைப் பார்த்ததும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் அக்கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 3 நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது சரமாரியாக வீசியது. மேலும், அந்த கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில் பன்னீர்செல்வம், சத்தியவாசகன் உள்ளிட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தன்வந்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பன்னீர்செல்வத்தை கொலை செய்தது, அதே பகுதியை சேர்ந்த ஜாண்டி செந்தில் தலைமையிலான கும்பல் என தெரிய வந்தது.
இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடிய போலீசார், திருக்காஞ்சி ஏரிகரையில் பதுங்கி இருந்த ஜாண்டி செந்தில், வைசாக், தீவனூர் பரத், சண்முகபுரத்தை சேர்ந்த கனகராஜ், விமல், அஜித், பூத்துறை பரத், மூர்த்தி, யுவராஜ் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஜாண்டி செந்திலின் நண்பரான ஜெயபாலை, பலியான ரவுடி பன்னீர்செல்வம் தலைமையிலான கும்பல், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்தது தெரியவந்தது.
இதற்காக பழி வாங்கும் விதமாக ரவுடி பன்னீர்செல்வத்தை கொலை செய்ய இரண்டு ஆண்டுகளாக எதிர் தரப்பு திட்டமிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் கொலைக்கு பயன்படுத்திய கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள், மற்றும் செல்போஃன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், ஒன்பது பேரையும் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி, புதுச்சேரி காலாபட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications