புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 23 இடங்கள் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் - டைம்ஸ் நவ் சர்வே

Google Oneindia Tamil News

புதுவை: புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி 19 முதல் 23 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ்நவ்- சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பாஜக-என்.ஆர். காங்கிரஸ் அணிக்கு 47.2% வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதுவை முதல்வராக என்.ஆர்,காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு 49.8% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 NR Congress alliance will win 23 seats and rule again in puducherry- opinion polls

30 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட புதுவை மாநிலத்திலும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் டைம்ஸ்நவ்- சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி 19 முதல் 23 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ், தி.மு.க கூட்டணிக்கு 7 முதல் 11 வரையிலான தொகுதியே கிடைக்கும் என்று அதிரடியாக கூறியுள்ளது.

புதுவையில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் அணிக்கு 47.2% வாக்குகளும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு 39.5% வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதுவை முதல்வராக என்.ஆர்,காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு 49.8% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாராயணசாமிக்கு 20% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பு முடிவுகள் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

English summary
In puducherry the NRC-BJP-AIADMK alliance is projected to win 19 to 23 seats, according to a Times Now poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X