நம்பிக்கை வாக்கெடுப்பு- சட்டசபையில் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும்... முதல்வர் நாராயணசாமி
புதுவை: கூட்டணிக் கட்சிகளின் கருத்தைக் கேட்டு, நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் இறுதி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
புதுச்சேரியில் தற்போது பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதால், நாராயணசாமி அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் நாராயணசாமி அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில், இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன், திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

30 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் தற்போதுவரை 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ஒரு திமுக எம்.எல்.ஏ.வும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. அதேநேரம் நியமன உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 15 எம்எல்ஏகளின் ஆதரவு எதிர்க்கட்சிக்கு உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணிக் கட்சிகள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசித்தோம்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாளை காலை சட்டமன்றம் கூடுவதற்கு முன்பாக சட்டமன்றத்தில் எங்களின் நிலைப்பாட்டை அறிவிப்போம். கூட்டணிக் கட்சிகள் கருத்தைக் கேட்டு நாளை காலை இறுதி முடிவு தெரிவிக்கப்படும்" என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications