புதுச்சேரி தேர்தலில் திடீர் பரபரப்பு- பா.ம.க. போட்டியிடவில்லை- 10 தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் வாபஸ்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுக்களை திரும்பப் பெற்றது. மேலும் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி சட்டசபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதிமுக அணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதேபோல் புதுச்சேரியிலும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
ஆனால் புதுச்சேரி பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து அதிருப்தி ஏற்பட்டதால் அதிமுக- பாஜக கூடணியில் இருந்து பா.ம.க. விலகியது. இதனையடுத்து தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து 10 தொகுதிகளில் பா.ம.க. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது.
இதனால் அதிமுக, பாஜக கட்சிகள் அதிர்ச்சி அடைந்து பாமகவை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டன. இந்த நிலையில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடையும் தருணத்தில் 10 தொகுதிகளிலும் பா.ம.க. திடீரென வேட்புமனுக்களை வாபஸ் பெற்றது.
அத்துடன் இந்த சட்டசபை தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை எனவும் அறிவித்துள்ளது. பா.ம.க.வின் இந்த திடீர் முடிவு புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications