நலமுடன் திரும்பு சுஜித்.. புதுச்சேரியில் பழங்குடியினர் மனமுருக பிரார்த்தனை
Recommended Video
புதுச்சேரி: குழந்தை சுர்ஜித் நலமுடன் மீண்டு வர வேண்டி புதுச்சேரியில் பழங்குடியின மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் செய்தனர்.
திருச்சி அருகே மணப்பாறை, நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குழந்தை சுர்ஜித் நலமுடன் மீண்டு வர தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதேபோல் புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் சிறுவர்கள் முதல் பெண்கள் என 100 க்கும் மேற்பட்டோர் மழையில் நனைந்தபடி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே குழந்தை சுர்ஜித் நலமுடன் மீண்டு வர அனைவரும் இறைவனை பிராத்திப்போம் என்றும், மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி டிவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.

குழந்தை சுஜித்தை மீட்க பல்வேறு வழிகளிலும் மீட்புக் குழுவினர் முயன்று வருகின்றனர். ஆனால் இதுவரை சுஜித்தின் நிலை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications