ஒரே ஒரு அப்பாயின்ட்மென்ட்.. டோட்டல் பாண்டிச்சேரியிலும் கட்சி குளோஸ்.. அதிர்ச்சியில் தினகரன்!
40 அமமுக நிர்வாகிகள் கூண்டோடு விலகி உள்ளனர்
Recommended Video
புதுவை: திரும்பவும் அமமுக துளிர்விட துவங்கி உள்ளது என்று நினைத்தால்.. புதுவையில் சிதறி சின்னாபின்னமாகிவிட்டது! ஒட்டுமொத்தமாக புதுச்சேரி அமமுக நிர்வாகிகள் 40 பேரும் விலகி... மிகப்பெரிய அதிர்ச்சியை தினகரனுக்கு தந்துள்ளனர்!
தேர்தல் தோல்விக்கு பிறகு மனரீதியாக ரொம்பவே அப்செட்டில் இருந்தார் டிடிவி தினகரன். பிறகு தன்னை தானே சமாதானப்படுத்தி கொண்டு, இப்படியே இருந்தால் வேலைக்காகாது என்று நினைத்து அதிரடியில் இறங்கினார்.
முதல் வேலையாக கட்சியை பதிவு செய்தார். பிறகு அமமுகவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். இதற்காக மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார். அதன்படி திருச்சி, ராமநாதபுரம் என ஒவ்வொரு மாவட்டமாக மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து வருகிறார்.

புதுச்சேரி
இதில் ஒரு பகுதியாக, கட்சியின் ஒருங்கிணைப்பு செயலாளர்களாக 6 பேரும், புதுச்சேரி அமமுக செயலாளராக பி.வேல்முருகனையும் நியமித்து டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால் புதுவை மாநில தலைவராக வேல்முருகன் நியமிக்கப்பட்டதற்கு அமமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நிர்வாகிகள்
இதனால் கட்சியின், புதுவை துணைத் தலைவர், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் என அமமுகவின் நிர்வாகிகள் 40 பேருமே கூண்டோடு விலகி உள்ளனர். இதனால் புதுவை அமமுகவே சிதறி சின்னாபின்னமாகிவிட்டது. ஒரு சின்ன மாநிலத்தில் 40 நிர்வாகிகள் என்பதுதான் ஒரு கட்சியின் மிகப்பெரிய பலம்.

அவசர ஆலோசனை
ஆனால் 40 பேருமே இவ்வளவு கோபமாக வெளியேறி விட்டார்கள் என்றால், அந்த வேல்முருகன் யார்? அவர் ஒருவருக்காக இத்தனை பேர் விலக என்ன காரணம் என உடனடியாக தெரியவில்லை. ஆனால் நியமன அறிவிப்பை பார்த்ததும், இந்த நிர்வாகிகள் எல்லாம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

சசிகலா
இதற்கு பிறகுதான் ராஜினாமா கடிதத்தை டிடிவி தினகரனுக்கு எல்லாரும் சேர்ந்து அனுப்பி வைத்துள்ளனர். ஒரே ஒரு அறிவிப்பினால் புதுவையே காலியாகிவிட்டதுதான் இப்போதைய தினகரனின் ஷாக்! அது மட்டுமில்லை.. ஏற்கனவே கோபத்தில் உள்ள சசிகலா இதை எப்படி எடுத்து கொள்ள போகிறாரோ என்பது அடுத்த எதிர்பார்ப்பு!
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications